அடுத்த குத்துப்பாடல் ரெடி... - ‘ஜெயிலர் 2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ஜெயிலர் 2’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வர அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஆகியோரும் நடித்திருப்பதாகத் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதத்தில் சென்னையில் தொடங்கி கேரளா, கோவை, கோவா எனப் பல்வேறு பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்தது. இதில் ஏகப்பட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வந்ததால் நீண்ட மாதங்களாக படப்பிடிப்பு நீண்டது. இதில் கடைசி கட்டத்தில் ஷாருக்கான் நடிக்கவிருந்ததாகவும் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி வெளியான வீடியோவும் ரசிகர்களின் வரவேற்பை அதிகரித்தது. குறிப்பாக பின்னணியில் இடம் பெற்ற இசை பலரது பாராட்டை குவித்தது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு ஒரு புதுப்போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் ரஜினிக்கு பின்னால் ஏகப்பட்ட பேர் கையில் தண்ணீர் டம்ளருடன் நிற்கின்றனர். இதை பார்க்கையில் ஒரு குத்துப்பாடல் எனத் தெரிகிறது. ஏற்கனவே ரஜினி படத்தில் அனிருத் இசையமைத்த குத்துபாடல்கள் ‘மரண மாஸ்’(பேட்ட), ‘சும்மா கிழி’(தர்பார்), ‘சிக்கிடு’(பவர்ஹவுஸ்’ போன்றவை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதும் அப்படி இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் விரைவில் பாடலுக்கான புரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. The Feast is ready!🪘💥 #Jailer2 First Single releasing on August 21 🔥 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren #SantoshRaju @kabilanchelliah @RIAZtheboss #Jailer2FromOct15 pic.twitter.com/PKPNXvONXH — Sun Pictures (@sunpictures) August 18, 2026

ரஜினி மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு மற்றும் மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரை வட்டாரங்களின் தகவல்படி, விஜய் சேதுபதி மற்றும் வித்யா பாலன் ஆகியோரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். தற்போது இப்படத்தில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.