PulseNews
சினிமா

“பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி” - சூரி நெகிழ்ச்சி!

சூரி தற்போது கைவசம் ‘மண்டாடி’ படத்தை வைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து ‘அயலான்’ இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் சென்னையில் ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அதில் ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு விருது வழங்கினார். பின்பு மேடையில் பேசிய அவர், “பொதுவாக ஒரு வாழ்க்கையில் பெண் இல்லாமல் ஒரு வெற்றி முழுமை அடைந்தது கிடையாது. அது அம்மா, மனைவி, சகோதரி, மகள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். முதுகைப் பிடித்து முன்னோக்கிக் கொண்டுசெல்லும் சக்தியாக பெண்கள் இருக்கிறார்கள். பெண் உயரும்போதுபோது அவர்கள் மட்டும் உயர்வது கிடையாது. பல பெண்களின் கனவும் சேர்ந்து உயர்கிறது. பெண்கள் குழந்தைகளை பெற்று, வளர்த்து, ஆளாக்குவதற்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். அது இராணுவத்திற்கு சமம். சாமிக்கு அப்புறம் பொண்டாட்டி என்று சொல்வார்கள். ஆனால் பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி. பல நாட்கள் நான் பெரிதாக படிக்கவில்லை என வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் ஒரு ஐஏஎஸ்-க்கு விருது வழங்குவதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது” என்றார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“பொண்டாட்டிக்கு பிறகுதான் சாமி” - சூரி நெகிழ்ச்சி!
PulseNews சுருக்கம்

சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் நடிகர் சூரி கலந்து கொண்டு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு விருது வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர், பெண் இல்லாமல் ஒருவரின் வெற்றி முழுமையடையாது என்றும், அம்மா, மனைவி, சகோதரி அல்லது மகள் என யாராக இருந்தாலும் ஒருவரின் முன்னேற்றத்திற்கு பெண்கள் மிக முக்கியம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தற்போது சூரி கைவசம் ‘மண்டாடி’ திரைப்படம் உள்ளது, இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ‘அயலான்’ பட இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema