PulseNews
சினிமா

என்னோட முதல் படம், என்னை விட விஜய்க்கு சம்பளம் கம்மி; எவ்வளவு தெரியுமா? வனிதா ஓபன் டாக்

தமழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்திருந்தாலும், வனிதா விஜயகுமார் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். 1995-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், அடுத்து ராஜ்கிரன் ஜோடியாக மாணிக்கம், படத்தில் நடித்தார். அடுத்து கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்ற மலையாள படத்திலும் தேவி என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார். 1999-ம் ஆண்டு நடிப்பில் இருந்து விலகிய வனிதா விஜயகுமார் 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொணடார் அதன்பிறக திருமண விவாகரத்து பெற்ற வனிதா, 2013-ம் ஆண்டு, நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய வனிதா, அநீதி, அந்தகன், கடைசி தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். நடிகையாக மட்டும் இல்லாமல், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி கமல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமான வனிதா, கடைசியாக, சமீபத்தில் வெளியான லவ்வோ லவ் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். வாழ்க்கையில் எதையுமே வெளிப்படையாக பேசி வரும் வனிதா, பல சூழ்நிலைகளில் தைரியமான முடிவு எடுத்துள்ளார். இவரின் பல பேட்டிகள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அந்த வகையில் இவர் பழைய பேட்டி ஒன்றில், எனது முதல் படத்தில் என்னை விட விஜய்க்கு சம்பளம் குறைவு என்று கூறியுள்ளார். 1995-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படம் தான் வனிதா அறிமுகமான முதல் படம். நம்பிராஜன் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கரண், செந்தில், வடிவேலு, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் குறித்து பேசிய வனிதா விஜயகுமார், நான் அறிமுகமான சமயத்தில் ஹீரோயினுக்கு அதிக சம்பளம் கிடைத்தது, அன்றைய காலக்கட்டத்தில் என்னை விட விஜய்க்கு ஒரு லட்சம் சம்பளம் கம்மி. நான் அப்போ பெரிய ஹீரோயின் கிடையாது. ஆனால் எல்லோரும் ஒன்றாக காரில் செல்வோம் என்று வனிதா கூறியுள்ளார்.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
என்னோட முதல் படம், என்னை விட விஜய்க்கு சம்பளம் கம்மி; எவ்வளவு தெரியுமா? வனிதா ஓபன் டாக்
PulseNews சுருக்கம்

1995-ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், தனது முதல் படத்தில் விஜயை விட தனக்குத்தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரலேகா படத்தைத் தொடர்ந்து மாணிக்கம் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்த வனிதா, மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ் மற்றும் தெலுங்கில் தேவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்திருந்தாலும், ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர் 1999-ம் ஆண்டு நடிப்பதிலிருந்து விலகினார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema