அக்காவுக்காக ஒரே நாளில் 2 முறை வளைகாப்பு செய்த ரேவதி; கடும் கோபத்தில் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் அப்டேட்
சாப்பாட்டில் மயக்க மருந்து... இந்துவுக்கு காத்திருக்கும் சிக்கல்! - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட் சின்னஞ்சிறு கிளியே சீரியலில் கடந்த எபிசோடில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்து அன்புடன் உணவு சமைத்து எடுத்துச் சென்றிருந்த நிலையில், இன்றைய எபிசோடில் இந்து சமைத்த உணவில் வாந்தி, பேதி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த விஷயம் குறித்து எதுவும் அறியாத இந்து, அந்த உணவை ஆதரவற்ற குழந்தைகளிடம் கொண்டு செல்கிறாள். மறுபக்கம், விஷ்வா பசிக்கிறது என்று கூறியதும், சுகுணா இந்து சமைத்த உணவை அவனுக்கு பரிமாறுகிறாள். விஷ்வாவும் அந்த உணவை சாப்பிடத் தொடங்க, இதைப் பார்த்த புவனா அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்திருப்பதை விஷ்வாவிடம் கூறி, குழந்தைகளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் இந்துவே குற்றவாளியாகி கைது செய்யப்படுவாள் என்ற தனது திட்டத்தை வெளிப்படுத்துகிறாள். அதன்பின் விஷ்வாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறாள். இந்நிலையில் கர்ணாவும் பசிப்பதாக வந்து உணவு கேட்க, சுகுணா மற்றும் ஜெயந்தி அதே உணவை அவனுக்கும் கொடுக்கிறார்கள். கர்ணாவும் அதை சாப்பிடத் தொடங்கியதும் புவனா மீண்டும் அதிர்ச்சியில் உறைகிறாள். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறது? புவனாவின் திட்டம் வெற்றியடையுமா? இந்து புதிய சிக்கலில் சிக்கிக்கொள்ளப் போகிறாளா? என்ற என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, திரு கேட்ட கேள்வி.. உச்சகட்ட பதற்றத்தில் கவிதா - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட் திருமாங்கல்யம் சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் திரு அவார்ட் பங்ஷன் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் இன்று கவிதா கௌதம் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது தாத்தா அந்த வழியாக வர கவிதா பதறிப்போய் கௌதமை ஓடி ஒளிந்து கொள்ள சொல்கிறாள். பிறகு கவிதாவை பார்த்து இங்கு என்னம்மா பண்ற என்று கேட்க போன் பேச வந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு எல்லோரும் வீட்டுக்கு வர கவிதா தூங்கிக் கொண்டிருக்கும் போது திரு அந்த ஸ்கெட்ச்ல இருக்கிறது கௌதம் தானே.. அவன நீங்க தானே வேலைக்கு வச்சீங்க அப்போ உங்களுக்கு இதெல்லாம் தெரியும் தானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கவிதா பதறிப் போய் தூக்கத்திலிருந்து எழுகிறாள். இதே நேரத்தில் திருவிடம் இருந்து போன் கால் வர கவிதை போன் எடுக்க திரு அந்த ஸ்கெட்ச் ரெடியா என்று கேட்க மேலும் பதட்டம் அடைகிறாள். உடனே அந்த ஸ்கெட்ச் எடுத்து எரிக்க மகா இதை பார்த்து சந்தேகம் அடைகிறாள். பிறகு கௌதம் ரூமுக்கு வந்து கவிதாவிடம் அந்த ஸ்கெட்ச் பற்றி கேட்க அவள் தேடுவது போல நடிக்கிறாள். மேலும் வேறொரு உருவத்தை வரைந்து அதை ஓரிடத்தில் வைத்து இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரோகினிக்கு நடக்கும் வளைகாப்பு.. வருத்தத்தில் இருந்த ரேவதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் கடந்த எபிசோடில் ரோகினியின் வளைகாப்பு விழாவுக்கு வந்த ரேவதியை சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில், இன்றைய எபிசோடில் வீட்டிற்கு திரும்பிய ரேவதி, "அம்மா இப்படி செய்வார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என வருத்தப்படுகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டியும் கார்த்திக்கும் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். மேலும், வீடியோ கால் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்வதாக கார்த்திக் கூறினாலும், அதற்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கிறாள். இதையடுத்து கார்த்திக், மயில்வாகனத்திற்கு போன் செய்து ஒரு திட்டத்தை கூறுகிறான். வளைகாப்பு விழா முடிந்ததும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி ரோகினியை ஸ்டூடியோவுக்கு அழைத்து வருமாறு சொல்கிறான். அதன்படி சாமுண்டீஸ்வரி, வீட்டிலேயே புகைப்படம் எடுக்கலாம் என கூறினாலும், மயில்வாகனம் ஸ்டூடியோவுக்கு சென்று எடுத்து வரலாம் என்று கூறி ரோகினியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார். மறுபக்கம், கார்த்திக் தனது புதிய வீட்டில் ரோகினிக்காக வளைகாப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறான். அந்த இடத்திற்கு ரோகினியும் மயில்வாகனமும் வருகிறார்கள். அதன்பிறகு, வருத்தத்துடன் இருக்கும் ரேவதியை கார்த்திக் கீழே அழைத்து வர, அங்கு ரோகினியை பார்த்ததும் ரேவதி மகிழ்ச்சியில் திளைக்கிறாள். இதையடுத்து ரோகினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. ரோகினி மற்றும் மயில்வாகனம் அங்கு வந்திருக்கும் தகவல் யாரோ ஒருவரின் மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி நேராக அந்த இடத்திற்கு வந்து சண்டையிடத் தொடங்குகிறாள். கார்த்திக் இந்த ஏற்பாட்டை தான்தான் செய்ததாக கூற முயற்சிக்கும்போது, ரோகினி அவரை தடுத்து நிறுத்தி, "நாங்களே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தோம்" என்று கூறி சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்தி அனுப்புகிறாள். இந்நிலையில், இந்த சம்பவங்களுக்குப் பிறகு அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சின்னஞ்சிறு கிளியே தொடரின் இன்றைய எபிசோடில், ஆதரவற்ற குழந்தைகளுக்காக இந்து அன்புடன் சமைத்து எடுத்துச் சென்ற உணவில், வாந்தி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த சதித்திட்டம் குறித்து எதுவும் தெரியாத இந்து, அந்த உணவை குழந்தைகளிடம் கொண்டு செல்கிறாள்.
இந்தச் சூழலில் இந்துவுக்குப் பெரிய சிக்கல் காத்திருக்கிறது. இதற்கிடையில், விஷ்வா தனக்கு பசிப்பதாகக் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.