PulseNews
சினிமா

“மனைவியை பிரிந்துவிட்டேன்” நாஞ்சில் விஜயன் ஷாக் காரணம்.. வீட்டில் வெடித்த புது பிரளையம்.. நெட்டிசன்கள் கொடுத்த அட்வைஸ்!

தனியார் தொலைக்காட்சி காமெடி ஷோக்கள் மூலம் பிரபலமாகி, சில படங்களில் நடித்துள்ளவர் நாஞ்சில் விஜயன். இவர், தற்போது வெளியிட்டுள்ள ஓர் இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவர், மனைவியை பிரிந்துவிட்டாரா? நாஞ்சில் விஜயன் மீதான சர்ச்சைகள் வரும்போதெல்லாம் இருவரும் ஒற்றுமையாகத்தானே எதிர்கொண்டார்கள்? கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஒரு கண்காட்சி நடத்தினார்களே? அவர்களுக்குள் என்ன ஆனது? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். “என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்து விட்டேன்” என நாஞ்சில் விஜயன் தற்போது வெளியிட்டதாக கூறப்படும் இன்ஸ்டா ஸ்டோரி வைரல் ஆகிவருகிறது. அதில், “சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் பிக் பாஸ் என்கின்ற நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டும் என்பதற்காக உங்களோடு பழகிய நல்ல நட்பை கொச்சைப்படுத்தி, என்னைப் பற்றி பல அவதூறுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டிருந்தீர்கள். அதையெல்லாம் பெரிது படுத்தாமல் உங்கள் முன்பு நாங்கள் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று தொடர்ந்து பல வகையில் உழைத்துக் கொண்டிருந்தேன். உங்களையும் என்னையும் தொடர்புபடுத்தி பல அவதூறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் தினம் தினம் இன்று வரைக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதை நினைத்து நான் ஒரு நாளும் வருந்தவில்லை. ஏனென்றால் என் மனைவி என்னோடு உறுதுணையாக இருக்கிறார் என்று! ஆனால் இன்று என் வீட்டில் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையின் போது என் மனைவியின் அம்மா, வார்த்தையை விட்டுவிட்டார்கள். ‘நீ ஒருதிருநங்கையை ஏமாற்றிவிட்டுதானே என் பொண்ணை திருமணம் செய்து கொண்டாய்?’ என்று! இந்த சமூகத்தில் சில பேர் என்னை பல கேலி விமர்சனங்கள் செய்தபோதும், என் குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தேன். ஆனால், இன்று அந்த நம்பிக்கையும் வீண் போனது. என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்து விட்டேன். நிச்சயமாக இந்த செய்தி உங்களுக்கு சந்தோசமாக இருக்கும் என்று நம்புகிறேன். சிலர் கமெண்ட் செய்தார்கள், ‘திருநங்கை சாபம் உன்னை சம்மா விடாது' என்று! அந்த சாபம் இன்று பலித்து விட்டது என்கின்ற சந்தோசம் நிச்சயமாக அவர்களுக்கும் இருக்கும். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல் இன்று மீண்டும் தனிமையில் இருக்கின்றேன். நிச்சயமாக இன்று உங்களுக்கு நல்ல உறக்கம் வரும் என்று நினைக்கின்றேன். நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் நான் தோற்று விட்டேன்” என உருக்கமாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அவரது சமூக வலைதள பக்கத்தில், இந்த பதிவு இல்லாததால், இது உண்மையிலே நாஞ்சில் விஜயன் வெளியிட்டதுதானா? அல்லது வேறு யாரேனும் அவர் பெயரை வைத்து வெளியிட்ட பதிவா? என்ற குழப்பமும் சமூக வலைதளத்தில் நிலவி வருகிறது. அதே நேரம், எத்தனையோ பிரச்சனைகள் வந்தபோது என்னுடைய கணவரை நான் நம்புகிறேன் என்று அவருடைய மனைவி சொல்லி வந்தாரே? அதனால், இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர். அதேநேரம், ”புரிந்துகொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை, எதையும் தவறாக புரிந்துகொள்ளாதீர்கள்” என தனது இதயம் உடைந்திருப்பதுபோல், கும்பிட்டு இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார். இதுகுறித்து சில பதிவர்களோ, சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு? குடும்பம் என்றால் பிரச்சனைகளும் வரத் தான் செய்யும். அதிலும், கணவன் மனைவி பிரச்சனையை பற்றி சொல்லவா வேண்டும்? இன்று அடித்துக் கொள்வார்கள், நாளையே கூடி குலாவிக் கொள்வார்கள். அதற்காக, சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு, அதை பெரிது படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இந்தநிலையில், இதற்கு நாஞ்சில் விஜயன் தரப்பில் இருந்து என்ன பதில் கொடுக்கப் போகிறார்? என்பதை வைத்தே முடிவுக்கு வரவேண்டும். அதுவரை, ஒரு குடும்பத்தைப்பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி, அவர்களுக்குள் பிரச்சனையை இன்னும் பெரிதாக்கிவிடக்கூடாது எனவும் மூத்த நெட்டிசன்கள், அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Polimer News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“மனைவியை பிரிந்துவிட்டேன்” நாஞ்சில் விஜயன் ஷாக் காரணம்.. வீட்டில் வெடித்த புது பிரளையம்.. நெட்டிசன்கள் கொடுத்த அட்வைஸ்!
PulseNews சுருக்கம்

தனியார் தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதில் அவர் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளதால், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஏற்கனவே இவர் மீதான சர்ச்சைகளின் போது இருவரும் ஒற்றுமையுடன் இருந்த நிலையில், சமீபத்தில் கூட இருவரும் இணைந்து கண்காட்சி ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திடீரென இத்தகைய தகவலை அவர் பகிர்ந்துள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதால், தங்களுக்குள் என்ன நடந்தது எனப் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema