இயக்குனர் சுந்தர்ராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆதங்கம் - எதற்காக?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குனருமாகவும் திகழ்பவர் சுந்தர்ராஜன். ராஜாதி ராஜா, வைதேகி காத்திருந்தாள், மெல்லத் திறந்தது கதவு, திருமதி பழனிசாமி என பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் தற்போது ஏராளமான நிகழ்வுகளில் பங்கேற்று பேசி வருகிறார்.

கோவை குண்டுவெடிப்பு:

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

1998ல் இந்தியாவே அதிர்ந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உரிழந்த சம்பவம் இன்னும் மனதை... pic.twitter.com/3eG7rXAQFA
— Vanathi Srinivasan (@VanathiBJP) August 31, 2026

1998ல் இந்தியாவே அதிர்ந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உரிழந்த சம்பவம் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களை ஏளனம் செய்து பேசியது முறையன்று. தங்களது அன்பான உறவுகளை இழந்தவர்களுக்கே அதன் வலி புரியும். கொங்கு மண்டலத்தில் பிறந்த ஒரு பிரபலமே இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நடிகர் சுந்தர்ராஜன் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பேசியது என்ன?

கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சுந்தர்ராஜன் அந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவி செத்துப்போயிட்டார்கள் என்பார்கள். அப்பாவியாக இருப்பதைக் காட்டிலும் செத்துப்போயிடு என்று சொல்கிறேன். யாருங்க அப்பாவி?

நீங்க பஸ்ல உக்காரப்போங்க. ப்ரதர் இது என்னுடைய சீட்டுனு சொல்லி தினத்தந்தி பேப்பரையோ, தினகரன் பேப்பரையோ போட்டு வச்சுட்டு என் சீட்டுனு சொல்லுவான். செருப்பை வச்சுட்டு போவாங்க. துண்டு வச்சுட்டுப் போவாங்க, சீப்பு வச்சுட்டு போவாங்க, கைக்குட்டை வச்சுட்டுப் போவாங்க. இது என் சீட்டுனு சொல்வாங்க. அவன் ஏமாளியா?

இவ்வாறு அவர் பேசினார்.

கோவையில் 1998ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மொத்த இந்தியாவையும் உலுக்கிய சம்பவம் ஆகும். இந்த விவகாரம் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகவும் கருதப்படுகிறது.

பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜன், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து அவர் பேசிய விதம் பலரது கண்டனங்களுக்கும் ஆளாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன், இயக்குனர் சுந்தர்ராஜன் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தனது வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திய அவர், இந்த சர்ச்சைக்குரிய பேச்சைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.