இரண்டாம் உலக போர் 'ரேஷன் பாக்ஸ்': 80 ஆண்டுகள் கழித்தும் அப்படியே இருக்கே; மிரண்டு போன நெட்டிசன்கள்
இரண்டாம் உலகப் போர் குறித்த வரலாற்றுப் புத்தகங்களையும் திரைப்படங்களையும் நாம் விரிவாகப் பார்த்திருப்போம். ஆனால், களத்தில் போரிட்ட வீரர்கள் என்ன மாதிரியான உணவை உட்கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரசியமான விஷயமாகும். சமீபத்தில் இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில், 80 ஆண்டுகள் பழமையான ராணுவ உணவுப் பெட்டி (Ration Tin) ஒன்று திறக்கப்பட்டது. அதில் இன்ஸ்டன்ட் காபி, பிஸ்கட், சர்க்கரைக் கட்டிகள், ஜாம் மற்றும் சாக்லேட்டுகள் அப்படியே இருந்த காட்சி மக்களைப் பெருமளவில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் 5 பெரிய ஏரிகளை விட பெருசு... பாலைவனத்துக்கு அடியில் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட கடலா? கெட்டுப்போகாத உணவும் 2,830 கலோரி ஆற்றலும் போர்க்களத்தில் உணவின் நோக்கம் சுவை அல்ல; அது வீரர்களின் உயிர்வாழ்வு மற்றும் உடனடி ஆற்றலுக்கான காரணியாகவே இருந்தது. காலை, மதிய மற்றும் இரவு உணவுகள் தனித்தனி பாக்கெட்டுகளாக வழங்கப்பட்டன. இவை மூன்றும் சேர்ந்து வீரர்களுக்கு ஒரு நாளைக்குச் சுமார் 2,830 கலோரி ஆற்றலை வழங்கின. அமெரிக்க 'சி-ரேஷன்' (C-Ration): டப்பாவில் அடைக்கப்பட்ட இறைச்சி, ஸ்பாகெட்டி, நூடுல்ஸ் மற்றும் பீன்ஸ் ஆகியவை இதில் அடங்கும். ஃபிரிட்ஜ் இல்லாமலேயே நீண்ட காலம் கெடாமல் இருக்கும் வகையில் இவை தயாரிக்கப்பட்டன. சுவை குறைந்த 'டி-ரேஷன்' சாக்லேட்: அவசர காலத்தில் உடனடி ஆற்றல் தர அமெரிக்க ராணுவம் சிறப்புச் சாக்லேட்டுகளைத் தயாரித்தது. வீரர்கள் இதைச் சாதாரண நேரத்தில் நொறுக்குத் தீனியாகச் சாப்பிட்டுத் தீர்த்துவிடக் கூடாது என்பதற்காகவே, வேண்டுமென்றே இதன் சுவை குறைவாகத் தயாரிக்கப்பட்டது. டப்பாவில் அடைக்கப்பட்ட இறைச்சி : 'ஹார்மெல்' நிறுவனம் தயாரித்த டப்பா இறைச்சிகள் வீரர்களின் முக்கிய உணவாக மாறியது. இதை நேரடியாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட முடிந்தது. கடுமையான வானிலையிலும் ஈரப்பதம் தாக்காத வகையில் கடினமான பிஸ்கட்டுகளும், வீரர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கச் சூடான இன்ஸ்டன்ட் காபியும் வழங்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின்போது வீரர்கள் பயன்படுத்திய 80 ஆண்டுகள் பழமையான ராணுவ உணவுப் பெட்டி ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதில் இருந்த இன்ஸ்டன்ட் காபி, பிஸ்கட்கள், சர்க்கரைக் கட்டிகள், ஜாம் மற்றும் சாக்லேட்டுகள் போன்றவை இன்னும் மாறாமல் அப்படியே இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரலாற்றுப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் உலகப் போரைப் பற்றி நாம் அறிந்திருந்தாலும், வீரர்கள் அன்றைய சூழலில் என்ன மாதிரியான உணவுகளை உட்கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரியாத சுவாரசியமான தகவலாகும். இந்த உணவுக் கலன் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.