கடந்த 100 வருஷத்துல ரிலீஸான படங்களில் ராஜமௌலியின் ஆல் டைம் ஃபேவரிட் படம் இதுதானா?
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற அடையாளத்தை பெற்றவர் எஸ்.எஸ். ராஜமௌலி. ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ என உலக அளவில் கவனம் பெற்ற படங்களை கொடுத்துள்ள அவர், தற்போது மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் ‘வாரணாசி’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், கடந்த நூறு ஆண்டுகால சினிமா வரலாற்றில் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்பதை ராஜமௌலி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவரது தேர்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜமௌலியின் ஆல் டைம் ஃபேவரிட் திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் படமோ அல்லது வரலாற்றுப் படமோ கிடையாது. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ திரைப்படம்தான் அவருக்கு மிகவும் பிடித்த படமாம். ஒரு சாதாரணமான கருத்தை சுவாரஸ்யமான திரைக்கதையாக மாற்றிய விதமும், கதையில் மனிதநேயத்தையும் உணர்வுகளையும் அழகாக இணைத்த விதமும் தன்னை மிகவும் கவர்ந்ததாக ராஜமௌலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்’ படத்தை பார்க்கும்போது இதுபோன்ற உணர்வுப்பூர்வமான கதைகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கும் ஏற்படுவதாக அவர் கூறியிருக்கிறார். 2003ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சஞ்சய் தத், அர்ஷத் வார்சி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மருத்துவத் துறையை பின்னணியாகக் கொண்டு, நோயாளிகளிடம் அன்பு, மனிதநேயம், மருத்துவர்–நோயாளி உறவு உள்ளிட்ட விஷயங்களை நகைச்சுவையுடன் சொல்லியிருந்தது இப்படம். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இது ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற பெயரிலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ‘சங்கர் தாதா எம்.பி.பி.எஸ்’ என்ற பெயரிலும் இப்படம் உருவானது. ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற பிரம்மாண்டமான படங்களின் மூலம் இந்திய சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த ராஜமௌலியின் மனதை கவர்ந்திருப்பது, எளிமையான மனிதநேயக் கதை என்பதே இந்த தகவலை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. பிரம்மாண்டம் மட்டுமல்ல... ஒரு கதையின் உணர்வும், மனிதநேயமும் தான் சினிமாவின் உண்மையான பலம் என்பதை ராஜமௌலியின் இந்தத் தேர்வு மீண்டும் உணர்த்தியுள்ளது!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநரான எஸ்.எஸ். ராஜமௌலி, பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற உலகப்புகழ் பெற்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது மகேஷ் பாபு நடிக்கும் ‘வாரணாசி’ படப் பணிகளில் அவர் பிஸியாக இருந்து வருகிறார்.
கடந்த நூறு ஆண்டுகால சினிமா வரலாற்றில் தமக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது என்பதை அவர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அவரது இந்தத் தேர்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.