PulseNews
சினிமா

Actor Devan: பாஜகவில் இருந்து விலகல்.. விஜயுடன் இணையும் தேவன்.. கேரளாவில் கால் பதிக்கும் தவெக!

பிரபல மலையாள நடிகர் தேவன், பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். அவரை வைத்து கேரளத்தில் தவெகவை வளர்க்கும் முடிவில் அக்கட்சி இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ், மலையாளம் சினிமாவில் வில்லன் கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தேவன். இவர் கேரள பாஜகவில் மிக முக்கிய தலைவராக திகழ்ந்தார். இவர் 2004ம் ஆண்டு கேரள மக்கள் கட்சி என்ற அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அதனை 2021ம் ஆண்டு பாஜகவுடன் இணைத்து விட்டார். அவருக்கு 2023ம் ஆண்டு கேரள மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது. கேரள மாநில பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் தனது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாகவும், கட்சியில் எனக்கு போதிய அங்கீகாரம், இடம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக தெரிவித்து அக்கட்சியில் இருந்து விலகுவதாக ஆகஸ்ட் 17ம் தேதி அறிவித்தார். இந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் பாஜகவுக்காக மிகவும் உறுதியாகவும், தீவிரமாகவும், பல இடர்களை எதிர்கொண்டும் பணியாற்றி வந்தேன். ஆனால், அவர்களால் எனது நோக்கத்தையும் திட்டமிடலையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் இவை அனைத்திற்கும் எதிராக இருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை என்று நான் நினைக்கிறேன். பணம் சம்பாதிப்பதில்தான் அவர்களுக்கு ஆர்வம் உள்ளது. அதை நான் எதிர்த்தேன். அவர்கள் என்னைச் சிறையில் அடைத்தார்கள்.

2024-2025 காலகட்டத்தில், இந்தக் கட்சியை விட்டு விலகுவது பற்றி நான் சிந்திக்கத் தொடங்கினேன். பாஜகவில் தொடர்ந்தால், ஒரு அரசியல்வாதியாக எனது லட்சியம் நிறைவேறாது என்று நினைத்தேன். நான் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன். இதைப் பார்த்த ஜோசப் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தில் சேர எனக்கு விருப்பமா என்று கேட்டு சிலர் மூலம் என்னை அணுகினார். நாங்கள் மிகவும் விரிவான மற்றும் சுவாரஸ்யமான உரையாடலை நடத்தினோம்.

இறுதியாக, சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர்களுடன் எனக்கு ஒரு ஆன்லைன் சந்திப்பு நடந்தது. கொள்கையளவில் கட்சியில் சேர்வதற்கு நான் ஒப்புக்கொண்டேன். எனவே நான் ஜோசப் விஜயை தனியாகச் சந்தித்து, அவருடன் கலந்துரையாட விரும்புவதாக அவர்களிடம் கூறினேன். அதன் பிறகு தவெக சார்பில் எனக்கு செப்டம்பர் 10 ஆம் தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நாளில் முதலமைச்சர் விஜயை சந்திப்பதற்கான அந்த வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன். எனவே,கடவுளின் அருளால் நான் பெரும்பாலும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இருப்பேன் என நம்புகிறேன்” என நடிகர் தேவன் கூறியுள்ளார். இதன் மூலம் கேரள அரசியலில் விரைவில் தவெக முழுவீச்சில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Actor Devan: பாஜகவில் இருந்து விலகல்.. விஜயுடன் இணையும் தேவன்.. கேரளாவில் கால் பதிக்கும் தவெக!
PulseNews சுருக்கம்

பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகரான தேவன், தான் அங்கம் வகித்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு கேரள மக்கள் கட்சியைத் தொடங்கியவர், பின்னர் 2021-ல் அக்கட்சியை பாஜகவுடன் இணைத்தார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் கேரள பாஜகவின் மாநில துணைத் தலைவராகவும் இவர் பணியாற்றி வந்தார்.

தற்போது பாஜகவிலிருந்து விலகிய தேவன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவரை முன்னிலைப்படுத்தி, கேரளாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema