அதிகாரம் செய்த ரஜினி, அவருடன் நடிக்க மறுத்த வில்லன்; சூப்பர் ஸ்டார் மன்னிப்பு கேட்டதால் உருவான மெகாஹிட் படம்
ரஜினிகாந்த் தனது அதிகாரத்தை காட்டுவது போல் நடந்துகொண்டதால் அவரது படத்தில் நடிக்க அப்பா மறுத்துவிட்டார் என்று பிரபல பாலிவுட் நடிகர் அம்ரிஷ் புரியின் மகன் ராஜீவ் புரி, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்கள், சன்னி தியோல், அஜய் தேவ்கன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுடன் தனது தந்தைக்கு இருந்த நெருக்கமான உறவுகள் குறித்து பேசியுள்ள அம்ரிஷ் புரியின் மகன் ராஜீவ் புரி, விக்கி லால்வானியுடன் நடைபெற்ற உரையாடலில், ராணி முகர்ஜி மற்றும் ப்ரீத்தி ஜிந்தா தொடர்பான ஒரு சம்பவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். அது தனது தந்தையின் அக்கறையையும், பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தியதாக ராஜீவ் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியில் பேசிய அவர், சன்னி தியோலும் அஜய் தேவ்கனும் அவரை தங்களது தந்தையாகவே கருதினர். அவர்கள் அவருக்கு மகன்களைப் போன்றவர்கள். சன்னியின் மனதில் என் அப்பா மீது அளவில்லாத அன்பு இருந்தது. அவருடன் சன்னி மிகவும் உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டிருந்தார். சன்னியின் ஆரம்பகால திரைப்படங்களில் அப்பாவுடன் இணைந்து நிறைய பணியாற்றியுள்ளார். அதேபோல், தர்மேந்திரா ஜியுடனும் அப்பா மிகவும் நெருங்கிய நண்பராக இருந்தார்” என்று ராஜீவ் கூறினார். அஜய் தேவ்கனுடனான தனது தந்தையின் தொடர்பு குறித்தும் பேசிய ராஜீவ் அஜய் தேவ்கனின் அறிமுகப் படமான ‘போல் அவுர் காண்டே’ திரைப்படத்தில் அம்ரிஷ் புரி நடித்திருந்தார். 1991ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் மூலம் அஜய் தேவ்கன் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அதில் அம்ரிஷ் புரி, அஜய்யின் தந்தையாக நடித்திருந்தார். அதன்பிறகு அஜய்யைப் பொறுத்தவரை, அவரது முதல் படமான ‘போல் அவுர் காண்டே’ படத்தில் அப்பா நடித்தார்” என்று ராஜீவ் தெரிவித்தார். ரஜினிகாந்துடன் நடிக்க மறுத்த அம்ரிஷ் புரி ஒரு கட்டத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பையும் அம்ரிஷ் புரி மறுத்ததாக ராஜீவ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தன்னுடைய அதிகாரத்தை காட்டுவது போல நடந்து கொள்கிறார் என்று அம்ரிஷ் புரி நினைத்ததால் அந்த படத்தில் நடிக்க மறுத்து சென்னையில் இருந்து திரும்பிய அம்ரிஷ் புரி, ரஜினியுடன் இணைந்து பணியாற்ற தனக்கு வசதியாக இல்லை என்று தயாரிப்பாளரிடம் தெரிவித்தார். பின்னர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து, இருவரும் இணைந்து திரைப்படங்களில் நடித்தனர். அவர்கள் ‘தளபதி’ என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அதன் பிறகு அப்பாவை ரஜினிகாந்த் மிகவும் விரும்பினார்” என்று ராஜீவ் கூறினார். இந்திய சினிமாவின் மறக்க முடியாத நடிகர்களில் ஒருவராக அம்ரிஷ் புரி இன்றளவும் நினைவுகூரப்படுகிறார். குறிப்பாக ‘மிஸ்டர் இந்தியா’ திரைப்படத்தில் அவர் நடித்த மொகாம்போ கதாபாத்திரம் அவரை மிகச் சிறந்த வில்லன் நடிகர்களில் ஒருவராக நிலைநிறுத்தியது. அதே நேரத்தில், அவரது திரைப்பயணம் வில்லன் கேரக்டர்களுக்காக மட்டுமே வரையறுக்கப்படவில்லை. பல திரைப்படங்களில் அவர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்துள்ளார். மேலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் டாம் (‘Indiana Jones and the Temple of Doom’) திரைப்படத்தில் மறக்க முடியாத மோலா ராம் கேரக்டரிலும் நடித்திருந்த அம்ரிஷ் புரி 2005ஆம் ஆண்டு தனது 72வது வயதில் காலமானார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்தில் அதிகாரத்துடன் நடந்துகொண்டதால், அவருடன் இணைந்து நடிக்க பாலிவுட் நடிகர் அம்ரிஷ் புரி மறுப்பு தெரிவித்ததாக அவரது மகன் ராஜீவ் புரி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இருப்பினும், ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டதால் ஏற்பட்ட சமரசத்திற்குப் பிறகு அந்தத் திரைப்படம் உருவாகி மெகாஹிட் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.