“வருங்கால முதல்வரே”: கூட்டத்தில் இருந்து வந்த கோஷம்; சிவகார்த்திகேயன் கொடுத்த ரியாக்ஷன் என்ன பாருங்க: வைரல் வீடியோ
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயனைப் பார்த்த ரசிகர் ஒருவர் "வருங்கால முதல்வர்" என முழக்கமிட்டார். அதைக் கேட்டு வெட்கத்துடன் புன்னகைத்த சிவகார்த்திகேயன், ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. சென்னையில் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் மேடையேறியபோது, அரங்கத்தில் இருந்த ரசிகர் ஒருவர் உற்சாக மிகுதியில் 'வருங்கால முதல்வரே' என கோஷமிட்டார். எதிர்பாராத இந்த வரவேற்பைக் கேட்ட சிவகார்த்திகேயன், மேடையில் மெல்லிய புன்னகை உடன், ‘உஸ்’ அமைதியாக இரு என்று சைகை செய்த' வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளிடையே தீயாகப் பரவி வருகின்றன. வீடியோவைப் பாருங்கள்: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் தடம் பதித்து, முதல்வராகவும் பொறுப்பேற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவர் நடிகராக இருந்த காலகட்டத்திலேயே விஜய் ரசிகர்கள் "மாநிலத்தின் எதிர்காலமே", "அடுத்த முதல்வரே" என போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது. தற்போது அதேபோன்று சிவகார்த்திகேயனுக்கும் ரசிகர்கள் "வருங்கால முதல்வர்" எனக் கோஷமிடத் தொடங்கியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து "வருங்கால முதல்வரே" என உற்சாகமாக முழக்கமிட்டார்.
இந்த எதிர்பாராத வரவேற்பைக் கண்டு வெட்கத்துடன் புன்னகைத்த சிவகார்த்திகேயன், ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு சைகை மூலம் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.