Sherya Saran: ஹீரோ யார் என சொல்லாமல் ஏமாற்றிய ஷங்கர்.. சிவாஜி ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்!

பிரபல நடிகை ஸ்ரேயா, சிவாஜி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சில நிகழ்வுகளை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

கடந்த 2006ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்த படம் “சிவாஜி - தி பாஸ்”. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும், ஸ்ரேயா சரண் ஹீரோயினாகவும் நடித்தனர். மேலும் விவேக், வடிவுக்கரசி, சுமன், மணிவண்ணன், ரகுவரன், சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். நயன்தாராவும் ஒரு பாடலுக்கு நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இப்படியான நிலையில் மழை படம் மூலம் 2005ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரேயா தனது 3வது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தது அந்த காலக்கட்டத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ஒரு நேர்காணலில் சிவாஜி படத்தில் நடித்தது பற்றி அவர் பேசியுள்ளார்.

அதில், “ஷங்கர் சார் என்னை அழைத்து, ஒரு படத்தில் நடிப்பீர்களா என்று கேட்டார். நான் எதுவும் கேட்காமல் ஓகே என சொன்னேன். அந்த படம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. முதலில் இந்த படத்தில் என்னுடன் நடிக்கப்போவது யார் என்பது கூட தெரியாது.

சிவாஜி படத்தின் தொடக்க விழா அன்று எனக்கு வேறு ஷெட்யூல் இல்லாததால் நான் சென்னை சென்றேன். அந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இருந்தனர். சரி இது மிகப்பெரிய படம் என்பது எனக்கு புரிந்தது. அந்நிகழ்ச்சியில் கூட இவ்வளவு பெரிய ஆட்கள் வந்திருக்கும் இந்த படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என சொன்னேன்.

இதன்பிறகு இயக்குநர் ஷங்கர் தான் நீங்கள் நடிக்கப்போகும் படத்தின் ஹீரோவைப் பார்க்கலாம் வாருங்கள் என அழைத்தார். அப்போது தான் எனக்கு ரஜினி தான் சிவாஜி படத்தின் ஹீரோ என்பதே தெரிந்தது. உடனே மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன். இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டாரான அவருடன் இணைந்து நடிப்பு எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. இதனால் ஷூட் செல்லும் முன் அவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என ஷங்கரிடம் சொன்னேன்.

சிவாஜி பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் என்னை மிகவும் இயல்பாக இயங்க வைத்தார். ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணமெல்லாம் உங்களுக்கு வர விட மாட்டார். அந்தளவு ரஜினிகாந்த் எளிமையாக பழகுவார். 10 நிமிடங்களில் அவர் உங்கள் சிறந்த நண்பரைப் போல உணர வைப்பார். கடின உழைப்புதான் மிக முக்கியமான விஷயம் என்று என்னிடம் எப்போதும் சொல்வார். ஷூட்டிங்கிலும் செம ஜாலியாக நடந்து கொள்வார் என ஸ்ரேயா அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்டமான திரைப்படம் 'சிவாஜி - தி பாஸ்'. இப்படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்க, ஸ்ரேயா சரண் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் விவேக், சுமன், வடிவுக்கரசி, மணிவண்ணன், ரகுவரன், சாலமன் பாப்பையா மற்றும் பட்டிமன்றம் ராஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சிவாஜி படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து நடிகை ஸ்ரேயா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, அந்தப் படத்தின் நாயகன் யார் என்பதை தன்னிடம் சொல்லாமல் இயக்குநர் ஷங்கர் மறைத்து ஏமாற்றியதாக அவர் அந்த அனுபவத்தை விவரித்துள்ளார்.