PulseNews
சினிமா

"வடிவேலு மண்டைக்கனமா மாறிட்டான்.." விட்டு விளாசிய சுறா தயாரிப்பாளர் சங்கிலிகருப்பு!

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பாளரும், நடிகருமானவர் சங்கிலி முருகன். கரிமேடு கருவாயன், காதலுக்கு மரியாதை, பாண்டிநாட்டு தங்கம், எங்க ஊரு பாட்டு்க்காரன் என பல வெற்றிப்படங்களைத் தயாரித்தவர்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

மண்டைகனம்:

அதில் அவர் கூறியிருப்பதாவது, கரிமேடு கருவாயன் படத்தில் கவுண்டமணி சம்பளம் வாங்கவில்லை. விஜயகாந்த் 2 லட்சம்தான் வாங்கினார். நம்பியார் மட்டும்தான் சம்பளம் வாங்கினார். கவுண்டமணி, செந்தில் சேந்து வர்ற மாதிரி வேஷம் வரல. செந்தில் தொடர்ச்சியாக இருந்தார்.
காதலுக்கு மரியாதைக்கு முன்னாடி வரை இருந்தாரு.

சுறாவில் வடிவேலுதான் வேணும்னு சொன்னாங்க. வடிவேலு சம்பளம் ரொம்ப அநியாயமா கேட்டாரு. எனக்கே அதிர்ச்சியா இருந்துச்சு. இவனைப் போட்டா காமெடி இருக்கும்னு நினைச்சு போட்டேன். திடீர்னு மண்டைகனம் ஆகிட்டான். எப்படி இருந்தவன்.

10 லட்சம் சம்பளம்:

தேவர் மகன் படத்துல ரயில்ல இருந்து இறங்கிறப்ப பெட்டியைத் தூக்குவான். விடுப்பானு சொல்லுவேன். இருக்கட்டும்ணே என்பான். அப்படியே மண்டைக்கனம். சுறா படத்துல எல்லாம் எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்டான். தினமும் 10 லட்சம். அரைநாள் அன்னைக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம்.

கையைப் பிடித்து இழுத்தியா காமெடி ஸ்பாட்டிலே உருவானது. திரும்ப திரும்ப சொல்றான், சொம்பை விட்டு எரிந்தது எல்லாம் நாங்களே டெவலப் பண்ணது.

இவ்வாறு அவர் பேசினார்.

வெற்றிகரமான தயாரிப்பாளர், நடிகர்:

1986ம் ஆண்டு முதல் தயாரிப்பாளராக இருந்து வரும் சங்கிலி முருகன் எத்தனையோ வெற்றிப்படங்களைத் தயாரித்திருந்தாலும், சுறா படம் தோல்விப்படமாகவே அமைந்தது. விஜய் நடிப்பில் அவர் காதலுக்கு மரியாதை எனும் வெற்றிப்படத்தை ஏற்கனவே அளித்திருந்தாலும் இந்த படம் ஒரு தோல்விப்படமாகவே அமைந்தது. 1999ம் ஆண்டு வெளியான நேசம் புதுசு என்ற படத்தில் சங்கிலி கருப்பு மற்றும் வடிவேலு இணைந்து நடித்த கையைப் பிடிச்சு இழுத்தியா காமெடி இப்போதும் பிரபலமான நகைச்சுவைக் காட்சியாக இருந்து வருகிறது.

இந்த படம் தவிர அவர் தயாரித்த எந்த படத்திலும் வடிவேலுவை வைத்து தயாரிக்கவில்லை. வடிவேலு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக இருந்தாலும் அவரது ஊதியம் குறித்து தயாரிப்பாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதேசமயம், 90களின் பிற்பாதியில் இருந்து 2010 காலகட்டம் வரை வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"வடிவேலு மண்டைக்கனமா மாறிட்டான்.." விட்டு விளாசிய சுறா தயாரிப்பாளர் சங்கிலிகருப்பு!
PulseNews சுருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும் நடிகருமான சங்கிலி முருகன், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் வடிவேலுவுக்கு மண்டைக்கனம் அதிகரித்துவிட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.

முன்னதாக தனது தயாரிப்பில் உருவான படங்களில் கவுண்டமணி சம்பளம் பெறாமல் நடித்ததையும், விஜயகாந்த் 2 லட்சம் ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். அந்தப் படங்களில் நம்பியார் மட்டுமே சம்பளம் பெற்று பணியாற்றிய தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema