போலி போராளிகள் பார்ஸ்வேர்ட் மறந்து போச்சா? ஒரு குரல் கூட இல்லை: பா.ரஞ்சித் குறித்து பிரபல நடிகர் வருத்தம்
சென்னையில் நடைபெற்ற சினிமா டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் விஷ்வா தமிழகத்தில் போலி போராளிகள் இருப்பதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் சினிாவில் அறிமுகமானவர் அபி சரவணன் (விஜய் விஷ்வா). அதன்பிறகு குட்டிப்புலி படத்தில் நடித்த இவர், 2014-ம் ஆண்டு வெளியான கேரள நாட்டிலம் பெண்களுடனே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பட்டதாரி, பிகில், மாயநதி, கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் நடித்த அபி சரவணன் தற்போது பாரிஸ் கபே என்ற படத்தில் நடித்துள்ளார். குரு சோமசுந்தரம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தில் அபி சரவணன், சீரியல் நடிகை அர்ச்சனா, ஹார்ட் பீட் சீரியஸில் நடித்திருந்த நடிகை அனுமோல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் அபி சரவணன், கர்நாடகத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இங்கிருக்கும் போலி போராளிகள் ஒரு குரல் கூட கொடுக்கவில்லை என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த இடத்தில் சம்பந்தம் இல்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால் கேட்க உரிமை இருக்கிறது. அதனால் கேட்கிறேன். கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சில போலி போராளிகள் எதற்கெடுத்தாலும் குரல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த விஷயம் குறித்து இதுவரை யாரும் வாய் திறக்கவே இல்லை. எனது முதல் படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், இவருக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். மற்ற விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார். அன்றைக்கு ஒரு வீடியோவில் ராஜ்மோகன் தலித் என்பதே தனக்கு தெரியாது என்று சொல்கிறார், நல்ல விஷயம் தான். ஆனால் தமிழர்கள் 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்போது கூட ட்விட்டரில் செக் செய்தேன். ஆனால் அவர் ஒரு பதிவு கூட வெளியிடவில்லை. அவர் மட்டும் அல்ல யாரையும் காணோம். போலி போராளிகள் பாஸ்வேர்டை மறந்துவிட்டார்களா என்று தெரியவில்லை. எல்லாவற்றிர்க்கும் குரல் கொடுக்க வேண்டும் என்று தான் நான் சொல்கிறேன். நாம் அனைவரும் ஜாதியை கடந்து வந்துவிட்டோம் என்ற விஷயத்தை விட ஜாதியில் இன்னும் லாக் ஆகி இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வருகிறேன். உலக நாடுகளை பொறுத்தவரை இந்தியாவின் மதிப்பு உயர்ந்துகொண்டே இருக்கிறது. நேற்று நான் நெப்போலியன் சாரை இதற்கு நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அப்போது அவரிடம் கவுரவ கொலை பற்றி பேச வேண்டும் என்று சொன்னேன். அவர் எப்படி ஒரு உயிரை எடுத்துவிட்டு அதை கவுரவ கொலை சென்று சொல்கிறர்கள் என்று கேட்டார் என கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில், தமிழகத்தில் போலிப் போராளிகள் இருப்பதாக நடிகர் விஜய் விஷ்வா பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமான விஜய் விஷ்வா, பின்னர் குட்டிப்புலி மற்றும் கேரள நாட்டிலம் பெண்களுடனே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பேசியுள்ள விவகாரம் சினிமா வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.