"அரசியல் வேண்டாம்னு விஜய்கிட்ட அரைமணி நேரம் பேசுனேன்.." உடைத்துப் பேசிய சுறா தயாரிப்பாளர்

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமானவர் சங்கிலி முருகன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

காதலுக்கு மரியாதை உருவானது எப்படி?

காதலுக்கு மரியாதை படம் ஒரே செட்யூலில் எடுக்கப்பட்டதுதான். காதலுக்கு மரியாதை படத்திற்கு ஒன்றரை லட்சம்தான் விஜய்க்கு முன்பணம் கொடுத்தேன். 18.5 லட்சம்தான் விஜய்க்கு சம்பளமே. ஒருநாள் எஸ்ஏ சந்திரசேகர் வீட்டிற்கு வந்தார். சிவாஜியுடன் நடிப்பது போல ஒரு படம் வாய்ப்பு வந்துள்ளது என்றார். நானும் சரி என்றேன்.

நான் டைரக்டர் ஃபாசிலிடம் சொன்னேன். அவர் நான் சும்மா இருக்கனுமே? என்று அவர் அந்த படத்தை மலையாளத்தில் எடுக்கிறேன் என்றார். இந்த இடைவெளியில்தான் ஷாலினி அங்கே அறிமுகம். ஷாலினியை படத்தில் பார்த்தேன். ஷாலினியை தமிழில் கொண்டு வரலாம் என்று கொண்டு வந்தேன்.

ஷாலினி ரொம்ப டேக் வாங்கும்னு எடிட்டர் எல்லாம் சொன்னாங்க. அதெல்லாம் விடுங்க.படத்தோட ஃப்ரேம் நல்லா இருக்கும்னு அதே நடிக்கட்டும்னு சொன்னேன். ஒரே செட்யூல். நல்லா ஒர்க் பண்றாங்க. பொள்ளாச்சியில் ஒரு வாரம். அப்போது பெப்ஸி ஸ்ட்ரைக். ஹிக்கின்பாதாம்ஸ் ஞாயிற்றுக்கிழமை அனுமதி வாங்கி எடுத்தோம். கஷ்டம்தான்.

சுறா தோல்வி அடைந்தது என்ன?

சுறா படத்தை எடுத்த இயக்குனர் கதை சொன்னது ஒன்னு, செய்தது ஒன்னு. நிறைய லொகேஷன் ஹைதரபாத், பாம்பே, ராமேஸ்வரம். அந்த படத்தை ஒரு வழியா முடிச்சோம். அதுக்கு அடுத்து விஜய்யை வச்சு ஒரு படம் எடுக்க முயற்சி எடுத்தேன். எட்டாக்கனியாகிவிட்டார்.

அரசியல் வேண்டாம் என்று சொன்னேன்:

விஜய் முதலமைச்சரான பிறகு நான் பார்க்கவில்லை. அவர் அப்பாவை மட்டும் போனில் அழைத்து வாழ்த்தினேன். அவங்க அப்பா வீட்டிற்கு வந்து அரைமணி நேரம் பார்த்து பேசிவிட்டு போனார். ரொம்ப பாசமாக இருப்பார். சுறாவிற்கு முன்பு விஜய்யிடம் அரைமணி நேரம் கேரவனில் உட்கார்ந்து அரசியல் வேண்டாம் என்று பேசினேன். கெளரவமாக இருக்கீங்க தம்பி. அவன் இவன்னு பேசுவாங்க தம்பினு சொன்னேன். அமைதியா இருப்பாரு.

இவ்வாறு அவர் பேசினார்.

சங்கிலி முருகன் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். குணச்சித்திர, நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் கொடி கட்டிப் பறந்தவர். இவர் கரிமேடு கருவாயன், எங்க ஊரு பாட்டுக்காரன், பாண்டிநாட்டு தங்கம், நாடோடி பாட்டுக்காரன், பெரிய மருது, காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் இவர் தயாரித்த வெற்றிப்படங்கள் ஆகும்.

1979ம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் சங்கிலி முருகன் அளித்த சமீபத்திய பேட்டியில், நடிகர் விஜயுடன் தான் மேற்கொண்ட உரையாடல்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று விஜயிடம் அரை மணி நேரம் தான் வலியுறுத்தி பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் ஒரே கட்டமாக படமாக்கப்பட்டதையும், அந்தப் படத்திற்காக விஜய்க்கு 18.5 லட்சம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். முன்னதாக எஸ்.ஏ. சந்திரசேகர் வந்து, சிவாஜியுடன் விஜய் நடிக்கும் வாய்ப்பு குறித்து தன்னிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.