PulseNews
சினிமா

உங்க இமேஜ்ஜை அழிக்கணும், மேக்கப் போட கூடாது; ஐஸ்வர்யா ராய்க்கு கண்டிஷன் போட்ட இயக்குனர்: படம் உலகளவில் சூப்பர் ஹிட்

பாலிவுட் சினிமாவில், சுபாஷ் காய் இயக்கிய ‘தால்’ திரைப்படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த புகழ்பெற்ற பாடல்களுக்காக மட்டுமின்றி, இந்தி திரையுலகில் அப்போது தங்களது ஆரம்ப கால பயணத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் அக்‌ஷய் கண்ணா ஆகிய இரு இளம் நடிகர்களை ஒன்றாக இணைத்ததற்காகவும் இன்றுவரை நினைவுகூரப்படுகிறது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்த படத்திற்கு முன்னதாக இருவரும் தங்களது திரைப்பயணத்தில் சில படங்களிலேயே நடித்திருந்த நிலையில், ‘தால்’ படம் அவர்களுக்கு ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தின் மூலம் இருவரும் ரசிகர்கள் மத்தியில் வலுவாக கவனம் பெற்றனர். சமீபத்தில் ‘தால்’ படத்தின் உருவாக்கம் குறித்து நினைவுகூர்ந்த சுபாஷ் காய், குறிப்பாக ஐஸ்வர்யா ராய் மற்றும் அக்‌ஷய் கண்ணாவை தேர்வு செய்தது குறித்தும், இவ்வளவு பிரம்மாண்டமான படத்திற்கு ஒப்பீட்டளவில் புதுமுக நடிகர்களை தேர்வு செய்ததற்காக தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்தும் பேசினார். தனது தேர்வுகள் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பிய போதிலும், அந்தப் படத்திற்கு புதிய முகங்கள்தான் தேவை என்று அவர் உறுதியாக நம்பியதாக தெரிவித்தார். அக்‌ஷய் கண்ணா ‘தால்’ படத்தில் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து சுபாஷ் காய் என்டி.டி.விக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “தால் அவருடைய 2-வது படம். அவரது தந்தையும் நடிகருமான வினோத் கண்ணா, அக்‌ஷயை எனது வீட்டிற்கு அழைத்து வந்து, படத்தில் நடிக்க அவரை பரிந்துரை செய்தார். அந்தப் பையனை எனக்கு பிடித்திருந்தது. ஏனென்றால், அவர் பார்ப்பதற்கு மிகவும் ஆழமான, தீவிரமான நடிப்புத் தன்மை கொண்டவராக எனக்குத் தோன்றினார். மறுபுறம், ஐஸ்வர்யா ராய் பிரபல நடன இயக்குநர் சரோஜ் கான் அளித்த பரிந்துரையின் மூலம் ‘தால்’ படத்திற்குள் வந்தார். சமீபத்தில்தான் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை வென்றிருந்த ஐஸ்வர்யா, அழகு மற்றும் கவர்ச்சி உலகத்துடன் ஏற்கனவே தொடர்புடையவராக இருந்தார். அதே நேரத்தில், படத்தின் நடனக் காட்சிகளையும் சிறப்பாக கையாளக்கூடிய ஒரு நடிகையை சுபாஷ் காய் தேடிக்கொண்டிருந்தார். இதையடுத்து, நடிகை தேர்வு தொடர்பாக சரோஜ் கானிடம் சுபாஷ் காய் ஆலோசனை கேட்டார். இதுகுறித்து சுபாஷ் காய் கூறுகையில், “ஆஷ் (ஐஸ்வர்யா) பெயர் பரிசீலனைக்கு வந்தபோது, அவர் அழகு சாதனப் பொருட்கள் உலகில் இருந்து வந்தவர் என்ற இமேஜுடன் இருந்தார். நான்கு அல்லது ஐந்து பெயர்கள் இருந்தன. அதனால், ‘மாதுரியைத் தவிர வேறு யாரை நடிக்க வைக்கலாம்?’ என்று சரோஜ் ஜியிடம் கேட்டேன். அதற்கு அவர் ஐஸ்வர்யா என்று கூறினார்.” ஐஸ்வர்யா ராய் தனது மிஸ் வேர்ல்ட் மற்றும் அழகு உலகப் பின்னணி மூலம் பெற்றிருந்த இமேஜை சுபாஷ் காய் நன்கு அறிந்திருந்தார். ஆனால், ‘தால்’ படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்திற்கு அந்த இமேஜ் பொருந்தாது என்று அவர் கருதினார். அதனால், படத்தின் கேரக்டருக்காக ஐஸ்வர்யாவின் அந்த இமேஜை முற்றிலும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் ஐஸ்வர்யா ராய் மேக்கப் இல்லாமல் தோன்ற வேண்டும் என்று சுபாஷ் காய் அவரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நினைவு கூறுகையில்,“ஐஸ்வர்யாவுக்கு அழகு சாதன உலகம் மூலம் ஒரு குறிப்பிட்ட இமேஜ் இருந்தது. நான் அவரை அழைத்தேன். அவர் வந்ததும், ‘உங்கள் இமேஜை அழிக்க வேண்டும்’ என்று கூறினேன். ஆனால், படத்தின் முதல் ஒரு மணி நேரத்தில் நீங்கள் மேக்கப் போடக்கூடாது என்றேன். அதற்கு அவர், ‘சரி, நீங்கள் என்ன சொன்னாலும் நான் செய்வேன்’ என்று கூறினார். ஒரு இயக்குநராக, நீங்கள் உங்கள் கேரக்டரை பற்றி சிந்திக்க வேண்டும் என்று சொன்னார். 1999ஆம் ஆண்டு வெளியான ‘தால்’, சுபாஷ் காய் எழுதி, தயாரித்து, இயக்கிய இசையை மையமாகக் கொண்ட காதல் திரைப்படமாகும். இதில் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் மற்றும் அக்‌ஷய் கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ‘தால்’ திரைப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெற்றது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உங்க இமேஜ்ஜை அழிக்கணும், மேக்கப் போட கூடாது; ஐஸ்வர்யா ராய்க்கு கண்டிஷன் போட்ட இயக்குனர்: படம் உலகளவில் சூப்பர் ஹிட்
PulseNews சுருக்கம்

சுபாஷ் காய் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'தால்' திரைப்படம், ஐஸ்வர்யா ராய் மற்றும் அக்‌ஷய் கண்ணா ஆகியோரின் ஆரம்பகால திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. இப்படத்தில் நடிக்கும்போது, தங்களது முந்தைய பிம்பத்தை மாற்றிக்கொள்ளவும், மேக்கப் பயன்படுத்த வேண்டாம் என்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இயக்குனர் நிபந்தனை விதித்திருந்தார்.

அக்காலகட்டத்தில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்த இளம் நட்சத்திரங்களான இருவரும் இணைந்த இப்படம், உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படம், அவர்களின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema