“விஷால் நல்ல இயக்குநர்!” – ‘மகுடம்’ ட்ரெய்லர் விழாவில் ஜான் விஜய் கலகல பேச்சு!
நடிகர் விஷால் தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார். தானே கதாநாயகனாக நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘மகுடம்’ படத்தில் விஷாலுடன் அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ட்ரெய்லரை பார்க்கும்போது, முழுக்க முழுக்க அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகியிருப்பது தெரிகிறது. குறிப்பாக அஞ்சலியின் கதாபாத்திரமும் ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விஷால் தனது திரைப்பயணத்தில் பல்வேறு வெற்றிகளையும், தொடர் சறுக்கல்களையும் சந்தித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன்பிறகு வெளியான ‘ரத்னம்’ எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பின்னர் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த ‘மதகஜராஜா’ விஷாலுக்கு மீண்டும் வெற்றியை கொடுத்தது. இதற்கிடையே இயக்குநராக வேண்டும் என்ற ஆர்வத்திலும் விஷால் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மிஷ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை தானே இயக்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால் அந்த படம் அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் விஷால் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் கதையை ‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ‘மகுடம்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜான் விஜய் பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ஜான் விஜய், “டூப் எதுவும் வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். ஆனால் என்னையும் தூக்கிப்போட்டு சண்டை போட வைத்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் செய்யக்கூடிய படம். எல்லோருக்குமே பிடிக்கும். உங்களை சக்சஸ் மீட்டில் பார்க்கிறேன்” என கலகலப்பாக பேசினார்.மேலும், படப்பிடிப்பு தளத்தில் விஷால் இயக்குநராக செயல்பட்ட விதம் குறித்தும் அவர் பேசினார். “ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷால் ‘கட்’ சொன்ன பிறகு ‘Moving on’ என்று கூறுவார். அதை கேட்டால்தான் எங்களுக்கு சந்தோஷமே. விஷால் நல்ல இயக்குநர்” என ஜான் விஜய் தெரிவித்தார்.இதனால் ‘மகுடம்’ படத்தின் ஆக்ஷன் மட்டுமின்றி, விஷாலின் இயக்குநர் அவதாரமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள ‘மகுடம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தில் அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், மேலும் இப்படத்தின் கதையை ‘ஈட்டி’ படத்தின் இயக்குநர் ரவி அரசு எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ஜான் விஜய், படப்பிடிப்பு தளத்தில் விஷால் ஒரு சிறந்த இயக்குநராகச் செயல்பட்ட விதம் குறித்துப் பாராட்டினார். ‘மகுடம்’ ஒரு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் எனத் தெரிவித்த அவர், விஷால் ஒரு நல்ல இயக்குநர் எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.