PulseNews
சினிமா

உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!

ஒரு நடிகரின் இழப்புக்கு நானும் காரணமாகி விட்டேன் என நடிகர் வையாபுரி கண் கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டவுசர் பாண்டியாக புகழ்பெற்ற பாரி வெங்கட்

கடந்த 1999ம் ஆண்டு விஜய், சிம்ரன் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மணிவண்ணன், தாமு, மதன் பாப், வையாபுரி ஆகியோரோடு பாரி வெங்கட் என்பவரும் நடித்திருந்தார். இந்த படத்தில் பாரி வெங்கட் டவுசர் பாண்டியாக சென்னை மொழி பேசி கலக்கியிருந்தார். அந்த ஒரு படம் அவரை தமிழ் சினிமா ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்த்தது. இந்த படத்தைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே, திருநெல்வேலி உள்ளிட்ட சில படங்களில் நடித்த பாரி வெங்கட் விபத்து ஒன்றில் மரணமடைந்தார்.

சினிமாவுக்கு அழைத்து வந்த வையாபுரி

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வையாபுரி, “துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் டவுசர் பாண்டி கேரக்டருக்கு நான் பாரியை அழைத்துக் கொண்டு இயக்குநரிடம் காட்டலாமா என எஸ்.வி.சேகரிடம் கேட்டேன். நான் அவரின் மேடை நாடகங்களில் பாரியின் நடிப்பை பார்த்ததால் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இயக்குநர் எழில் என்ன கேரக்டரை எதிர்பார்த்தாரோ அதற்கு பாரி வெங்கட் பொருத்தமாக இருந்தார்.

அந்த படம் மிகப்பெரிய அளவில் பாரி வெங்கட்டிற்கு அடையாளமாக அமைந்தது. பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கும்போது என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது வையாபுரி தான் என தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரபு நடித்த திருநெல்வேலி படத்தின் ஷூட்டிங்கிற்காக திருநெல்வேலிக்கு சென்றிருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ஏவிஎம் தயாரிக்கும் ஒரு சீரியலில் நடிக்க இருந்தார். அப்போதெல்லாம் அரசு பேருந்து மட்டும் தான் என்பதால் அதில் ஏறி சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த பேருந்து வரும் வழியில் விபத்துக்குள்ளானதில் பாரி வெங்கட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அவரது உடலை அங்கிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பற்றிய தகவலே மருத்துவமனைக்கோ, காவல்துறைக்கோ தெரியவில்லை. இப்போது மாதிரி விசிட்டிங் கார்டு தொடங்கி எந்தவித வசதியும் இல்லை.

சொல்லாமல் அடக்கம் செய்யப்பட்ட நடிகர்

யாரும் தேடி வராததால், எங்குள்ளவர் என தெரியாததால் பாரி வெங்கட்டை அங்கிருக்கும் ஓரிடத்தில் அடக்கம் செய்து விட்டார்கள். அதன்பிறகு எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் காவல் நிலையம் சென்று புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை காட்டி கேட்ட பிறகு இறந்தது பாரி வெங்கட் என்பது தெரிய வந்தது. உச்சத்துக்கு வளர்ந்து வந்த பாரி வெங்கட் முகத்தை கூட கடைசியில் பார்க்க முடியவில்லை. அவரை நாடகத்தில் நடிக்க விட்டிருந்தால் பாரி வெங்கட் குடும்பத்தோடு இருந்திருப்பார். அப்படி ஒரு நடிகர் இல்லையென ரொம்ப வருத்தமாக இருக்கிறது. பாரி இன்றைக்கு இருந்திருந்தால் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருப்பார் என வையாபுரி தெரிவித்துள்ளார்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உச்சத்துக்கு போயிருப்பான்.. என்னால இப்ப அந்த நடிகர் உயிரோட இல்ல.. நடிகர் வையாபுரி உருக்கம்!
PulseNews சுருக்கம்

'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் நடித்த டவுசர் பாண்டி என அழைக்கப்பட்ட பாரி வெங்கட்டின் மறைவுக்குத் தானும் ஒரு காரணம் என நடிகர் வையாபுரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது இந்த உருக்கமான பதிவு இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

1999-ம் ஆண்டு வெளியான விஜய், சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படத்தில் வையாபுரியுடன் இணைந்து பாரி வெங்கட்டும் நடித்திருந்தார். அந்த நடிகர் இன்று உயிருடன் இல்லாததற்குத் தானும் ஒரு காரணமாகிவிட்டதாகக் கூறி வையாபுரி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema