PulseNews
சினிமா

மாமியார் சொன்ன அந்த வார்த்தை, பலித்தது திருநங்கை சாபம்; மனைவியை பிரிந்ததாக நாஞ்சில் விஜயன் பதிவு

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமாகி சில படங்களில் நடித்துள்ளவர் நாஞ்சில் விஜயன். இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவர், மனைவியை பிரிந்துவிட்டாரா என்று கேட்டு வருகின்றனர். நாஞ்சில் விஜயன் திருமணத்தின்போது திருநங்கை வைஷு அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். ஆனாலும் இந்த புகாரை மறுத்த விஜயன், தனது குடும்பத்தில் பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அவர் இவ்வாறு கூறுகிறார் என்று தனது மனைவியுடன் இணைந்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்பிறகு திருநங்கை வைஷு இது குறித்து எவ்வித பதிவுகளும் வெளியிடாத நிலையில், தற்போது நாஞ்சில் விஜயன் தனது மனைவியை பிரிந்துவிட்டதாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்ட்டா ஸ்டோரியில், வெளியான ஒரு பதிவில், திருநங்கை சகோதரி வைஸ்ணவியிடம் நான் தோற்றுவிட்டேன். சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக எங்களுக்குள் இருந்த நல்ல நட்பை கொச்சைப்படுத்தி என்னைப் பற்றி பல அவதூறான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வந்தீங்க. என்னையும் உங்களையும் தொடர்புபடுத்தி தினம் தோறும் சோசியல் மீடியாவில் பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும் என்னுடைய மனைவி என்னுடன் உறுதியாக இருந்ததால் நான் அதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. அந்த விமர்சனங்களை எல்லாம் பெரிது படுத்தாமல் என்னுடைய வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்து வந்தேன். ஆனால் வீட்டில் ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையின் போது என்னுடைய மனைவியின் அம்மா நீ ஒரு திருநங்கையை ஏமாற்றிவிட்டு என் பொண்ணை திருமணம் செய்து கொண்டாய் என்று சொல்லிவிட்டார். சமூகத்தில் இருந்து பல்வேறு கேள்விகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டபோதும் எனது குடும்பம் எனக்கு உறுதுணையாக இருக்கிறது என்ற நம்பிக்கையிலே வாழ்ந்து வந்தேன். ஆனால் இப்போது அந்த நம்பிக்கை வீணாகிவிட்டது. என் மனைவியை பிரிந்து தனிமையில் வந்து விட்டேன். இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என நம்புகிறேன். அது மட்டும் இன்றி திருநங்கை சாபம் உன்னை சும்மா விடாது. அந்த சாபம் இன்று பழிதீர்த்து விட்டது என சிலர் கமெண்ட் செய்தார்கள். அனைவரும் இருந்தும் யாரும் இல்லாமல் மீண்டும் தனிமையில் இருக்கிறேன். நிச்சயம் இன்று நீங்க நல்லா தூங்குவீங்கன்னு நம்புறேன். நீங்கள் ஜெயித்து விட்டீர்கள், நான் தோற்றுவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். அதே சமயம், இந்த பதிவு தற்போது நாஞ்சில் விஜயன் சமூகவலைதள பக்கத்தில், டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இது உண்மையிலே நாஞ்சில் விஜயன் வெளியிட்டதுதானா? அல்லது வேறு யாரேனும் அவருடைய பெயரை வைத்து வெளியிட்ட பதிவுகளா? என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு இருக்கிறது. மேலும் எத்தனை பிரச்னை வந்தாலும் நான் உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று சொன்னாரே அவரா பிரிந்துவிட்டார் என்றும் ரசிகாகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மாமியார் சொன்ன அந்த வார்த்தை, பலித்தது திருநங்கை சாபம்; மனைவியை பிரிந்ததாக நாஞ்சில் விஜயன் பதிவு
PulseNews சுருக்கம்

விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் நாஞ்சில் விஜயன், தனது மனைவியை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் மனைவியை பிரிந்துவிட்டாரா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர்.

நாஞ்சில் விஜயனின் திருமணத்தின் போது, வைஷு என்ற திருநங்கை அவர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை மறுத்த விஜயன், தனது குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவே அவர் அவ்வாறு கூறுவதாகத் தெரிவித்து, தனது மனைவியுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema