திரைப்பட வாரியத்தின் கடவுள் செண்டிமெண்ட்; டைட்டிலில் மாற்றம் செய்த ரியோ படக்குழு!
‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜின் அடுத்த படமாக உருவாகியுள்ளது ‘ராம் இன் லீலா’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் வர்த்திகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தினை ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியிருக்க அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். இவரது இசையில் சமீபத்தில் வெளியான ‘செப்பு செல’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகியிருந்தது. மாலை 6 மணிக்கு மேல் நாயகி வர்த்திகா காணாமல் போவதாகவும் நாயகனின் நண்பரையே அவர் காதலிப்பதாகவும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தது. ஆகஸ்ட் 21ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்த நிலையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. அதாவது ‘ராம் அண்ட் லீலா’ என இடம் பெற்றுள்ளது. இந்த மாற்றம் குறித்து வெளியான தகவலில் படி, படத்தை பார்த்த மத்திய திரைப்பட வாரியம் முன்பு இருந்த டைட்டிலான ‘ராம் இன் லீலா’ இந்து மதக் கடவுளின் பெயரைக் குறிப்பது போல இருப்பதாகக் கூறி பெயரை மாற்ற அறிவுறுத்தியதின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாக திரைப்பட வாரியம் படத் தலைப்பில் கடவுளின் செண்டிமெட்ண்டை பார்ப்பது அதிகரித்து வருகிறது. மலையாளத்தில் கடந்த ஆண்டு சுரேஷ் கோபி நடித்த ‘ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’ படம் ‘ஜானகி வி vs ஸ்டேட் ஆஃப் கேரளா’ என்று மாறியது. பின்பு தெலுங்கில் கடந்த பிப்ரவரியில் வெளியான ஹே பகவான்’ படம் ‘ஹே பல்வநாத்’ என மாறியது. அடுத்ததாக வரலட்சுமி சரத்குமார் இயக்கி நடித்த ‘சரஸ்வதி’ படம் ‘எஸ்.சரஸ்வதி’-யாகவும் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பேட்டில் ஆஃப் கல்வான்’ படம் ‘மாத்ருபூமி’ எனவும் மாறியது குறிப்பிடத்தக்கது.

ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். திரைப்பட தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, படத்தின் தலைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்வா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார். வர்த்திகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார், மேலும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.