PulseNews
சினிமா

மைக் செட் ஸ்ரீராம் இப்படி பண்ணலாமா? - நாம் தமிழர் தம்பிகள் ஆவேசம்..! வைரலாகும் சீமான் வீடியோ

'Cringe' ஆக இல்லையா? - வெளுத்த நெட்டிசன்கள்..! 'முரட்டு சிங்கிள்' என்ற பெயரில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்த மைக் செட் ஸ்ரீராம், சில வருடங்களுக்கு முன்பு விருது விழாவில் பங்கேற்றபோது நடிகர் கமல்ஹாசனிடம், இந்த முரட்டு சிங்கிள் பத்தி பேசுங்க சார்? என கேள்வி எழுப்பினார். இதனை பார்த்து கடுப்பான பலரும், அவரிடம் கேட்க வேற கேள்வியே இல்லையா? இதெல்லாம் 'Cringe' ஆக இல்லையா? என வறுத்தெடுத்து வந்தனர். ' அரசியல் சோதனைகள்' வீடியோ..! 'மைக் செட்' யூடியூப் சேனலில் 'அரசியல் சோதனைகள்' என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவும், மற்ற கட்சியினரை தாக்கியும் வீடியோ வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. சீமானை இமிடேட் செய்து வீடியோ..! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உடல் மொழி, சிரிப்பு ஆகிவற்றை இமிடேட் செய்து ஸ்ரீராம் ஓவர் பெர்பார்மான்ஸ் செய்தது நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிலர் வீடியோ வெளியிட்டும் வருகின்றனர். இப்படி பண்ணலாமா? - சீமான் ஆதரவாளர்கள் ஆவேசம்..! கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே மேடையில் சீமானும், மைக் செட் ஸ்ரீராமும் தோன்றியபோது, சீமான் மைக் செட் ஸ்ரீராமை பாராட்டி வாழ்த்தினார். அப்போது, சீமான் கையால் விருது வாங்கிய ஸ்ரீராம், விருது வாங்குவதே கவுரம், அதுவும் ஒரு கவுரத்திடம் இருந்தே விருது வாங்குவது இன்னும் கவுரவம். நிறைய பேருக்கு சீமான் Inspiration ஆக இருப்பதாகவும், உங்கள் பேச்சை விரும்பி பார்ப்போம், எங்க ஏரியாவில் வேட்பாளர் யார் என்று தெரியாவிட்டாலும், உங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளார்கள், என்ன ஆனாலும் உங்கள் முயற்சியை விட்டுவிடாதீர்கள் என மேடையில் சீமானை பாராட்டி பேசியிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சீமான் ஆதரவாளர்கள், மைக் செட் ஸ்ரீராம் நீங்களே இப்படி கிண்டலடித்து வீடியோ பண்ணலாமா? என சமூக வலைதளங்களில் ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் பதிவிட்டு வருகின்றனர். சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் செய்வது சரியா? - தவெக ஆதரவாளர்கள் சீமான் தம்பிகள் சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் முதல் அமைச்சரையே வரைமுறை இல்லாமல் விமர்சிப்பது கருத்து சுதந்திரமாம், அதே போல மற்றவர்கள் சீமானை விமர்சித்தால் தாங்கிக் கொள்ள மாட்டார்களாம்.. என்ன இது கால கொடுமை என்று தவெகவினர் எதிர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். - தயாநிதி

Polimer News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மைக் செட் ஸ்ரீராம் இப்படி பண்ணலாமா? - நாம் தமிழர் தம்பிகள் ஆவேசம்..! வைரலாகும் சீமான் வீடியோ
PulseNews சுருக்கம்

'மைக் செட்' யூடியூப் சேனலில் 'அரசியல் சோதனைகள்' என்ற தலைப்பில் வெளியான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் கடும் ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முன்னதாக, ஒரு விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனிடம் 'முரட்டு சிங்கிள்' குறித்துப் பேசுமாறு மைக் செட் ஸ்ரீராம் கேட்ட கேள்வி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்தச் செயலைப் போலவே தற்போதைய வீடியோவும் இருப்பதாகவும், இது 'கிரின்ச்' (Cringe) ஆக உள்ளதாகவும் நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema