இந்த சூர்யா படத்திற்கு சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!

சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கு ரிலீஸுக்கு முன்பே பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் வணிக ரீதியான ஒப்பந்தங்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தமிழகத்தில் பிரபலமான பல திரையரங்குகளில் படம் வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரிலீஸ் சிக்கலில் விஸ்வநாதன் & சன்ஸ்

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்த நிலையில் வி நியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே லாப பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை உடன்படிக்கைக்கு வராத காரணத்தினால் நாளை படம் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது.

எந்த திரையரங்குகளில் வெளியாகாது

இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி சினிமாஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தை தங்களது எந்த திரையரங்கிலும் திரையிடுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றும், எனவே ராக்கி சினிமாஸில் இப்படத்திற்கான முன்பதிவு அல்லது திரையிடல் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களது மற்ற திரைப்படங்களுக்கான வார இறுதி அட்டவணை அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் District தளத்திலும், மற்ற மூன்று திரையரங்குகளுக்கான முன்பதிவு BookMyShow-விலும் வெளியாகியுள்ளதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வெற்றி திரையரங்குகள் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவும் கவனம் பெற்றுள்ளது. ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கான வணிக விதிமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்தபடி சாதகமாக முடியவில்லை என்றும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சென்னை வெற்றி திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிட வேண்டாம் என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், திண்டிவனம் மற்றும் திருச்செங்கோடு கிளைகளில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தொடர்ந்து வெளியாகும் என்றும் ராகேஷ் கவுதமன் கூறியுள்ளார்.

படம் வெளியாகும் நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான திரையரங்குகளில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபல திரையரங்குகளில் படம் வெளியாகாத சூழல் உருவாகியிருப்பது, ரிலீஸுக்கு முன்பே ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தடையாக பார்க்கப்படுகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வணிக ரீதியான ஒப்பந்தங்களில் நிலவும் கருத்து வேறுபாடுகளால், தமிழகத்தின் பல முன்னணி திரையரங்குகளில் இப்படம் வெளியாகாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த திடீர் அறிவிப்பு படக்குழுவினர் மற்றும் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.