படப்பிடிப்பு தளத்தில் நடிகைக்கு நேர்ந்த பகீர் சம்பவம்!
பஞ்சாபியை சேர்ந்த நடிகை ஷெஹ்னாஸ் கில் புதிதாக நடித்துள்ள படம் ‘இஷ்க்நாமா’. இப்படம் கடந்த ஜூலையில் வெளியானது. இதில் இடம் பெற்ற மூக்குத்தி தொடர்பான காட்சி வரவேற்பை பெற அதுகுறித்து பதிவிடுமாறு ரசிகர்கள் அவருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனால் அந்த காட்சிக்கு பின் அவர் ஒரு பயம் நிறைந்த அனுபவத்தைச் சந்தித்துள்ளார். இது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஷெஹ்னாஸின் மூக்குத்தி அவரது வாய்க்குள் சென்று தொண்டையில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷெஹ்னாஸ் இருமிக்கொண்டே அந்த மூக்குத்தியை வெளியே எடுக்க முயன்றார். அவருக்கு சக நடிகராக சௌரப் சச்தேவாவும் ஷெஹ்னாஸின் முதுகில் தட்டி உதவி செய்தார். பின்பு ஒருவழியாக அந்த மூக்குத்தி நல்வாய்ப்பாக வெளியே வந்தது. இந்த வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. ஷெஹ்னாஸ் வெளியிட்ட வீடியோவிற்கு கீழ் உடலை நல்ல படியாகப் பார்த்துக்கொள்ளும் படியும் பாதுகாப்பாக நடிக்கவும் அவரது ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாபி நடிகை ஷெஹ்னாஸ் கில் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் ‘இஷ்க்நாமா’. இப்படத்தில் இடம்பெற்ற ஒரு மூக்குத்தி தொடர்பான காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அது குறித்த அனுபவத்தைப் பகிருமாறு ரசிகர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, அந்த காட்சியின் படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை ஷெஹ்னாஸ் கில் ஒரு வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக அவரது மூக்குத்தி வாய்க்குள் சென்று தொண்டையில் சிக்கிக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.