PulseNews
சினிமா

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!

தமிழக முதலமைச்சர் விஜய் நடித்து ஜனநாயகன் படம் மிகப்பெரிய வசூலை ஈட்டவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

தடைகளை கடந்த ஜனநாயகன்

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகராக தமிழக முதலமைச்சர் விஜயின் கடைசிப் படமாக உருவானது “ஜனநாயகன்”. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஜூலை 23ம் தேதி வெளியானது.

முன்னதாக ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்ததால் பட வெளியீடு தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் படம் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஏப்ரல் 10ம் தேதி திடீரென ஜனநாயகன் முழுப்படமும் இணையத்தில் திருட்டுத்தனமாக கசிந்தது. இதுதொடர்பாக அப்படத்தில் பணியாற்றிய நபர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

முதல் வாரம் வசூல் வழை

இதற்கிடையில் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். ஜனநாயகன் படத்தை வெளியிடும் பணிகள் தொடங்கியது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் இப்படம் வெளியானது. டைட்டில் கார்டுக்கே ரசிகர்கள் சில்லறையை சிதற விட்டனர். ஏ சான்றிதழ் பெற்றதால் சிறுவர்கள் இப்படத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

Also Read: பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!

ஜனநாயகன் படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக மட்டும் சுமார் 1.20 கோடி பார்த்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும் தியேட்டரில் படம் வெளியானபோது ரசிகர்கள் கூட்டம் கூட்டமான சென்று ஜனநாயகனை கொண்டாடி விஜய்க்கு ஃபேர்வேல் பார்ட்டி கொடுத்தனர். இதனால் ஜனநாயகன் படம் முதல் வாரத்தில் வசூலை வாரிக் குவித்தது. ஆனால் இரண்டாம் வார வசூலுடன் ஒப்பிடுகையில் 79 சதவிகிதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் இப்படம் ரூ.200 கோடியை கூட தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வாரம் 18 வயதிற்குட்பட்டவரகள் அனுமதிக்கப்படாத நிலையில் தற்போது அனைத்து தியேட்டர்களும் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படத்தின் வசூல் எகிறும் என பார்த்தால் வார நாட்களில் தியேட்டர்கள் டல்லடிக்கிறது. வார இறுதி நாட்கள் மட்டுமே வசூல் ஓரளவு கிடைப்பதாக தியேட்டர் நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது. ஜனநாயகனுக்குப் பின் வந்த ஸ்பைடர்மேன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் கடைசிப் படம் அதள பாதாளத்திற்கு செல்லும் என யாருமே நினைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
PulseNews சுருக்கம்

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான படம் 'ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்த இப்படம், பல்வேறு தடைகளைக் கடந்து ஜூலை 23-ம் தேதி 'ஏ' சான்றிதழுடன் வெளியானது. படம் இணையத்தில் கசிந்த போதிலும், முதல் வாரத்தில் ரசிகர்கள் வரவேற்பால் நல்ல வசூலைப் பெற்றது.

இருப்பினும், இரண்டாம் வாரத்தில் படத்தின் வசூல் 79 சதவீதம் சரிந்து, மொத்த வசூல் ரூ.200 கோடியைக் கூட தாண்டவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது திரையரங்குகளில் குழந்தைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், வார நாட்களில் கூட்டம் குறைவாகவே உள்ளது. ஸ்பைடர்மேன் படத்தின் வெற்றியால், முதலமைச்சர் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் வணிக ரீதியாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema