PulseNews
சினிமா

விக்ரம் பிரபுவின் 'சிட்டி ஆப் கோல்டு' பட கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!

‘சிறை’ படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சித்தார்த் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். படத்தில் நாயகியாக சிவாத்மிகா ராஜசேகர் நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 'சிட்டி ஆப் கோல்டு' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் தங்கம் பற்றிய பின்னணிக் கதையை பேசும் படமாக அமைந்திருக்கிறது. அதற்கான காட்சிகள் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

Tamil News 1814 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விக்ரம் பிரபுவின் 'சிட்டி ஆப் கோல்டு' பட கிளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ்!
PulseNews சுருக்கம்

'சிறை' திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது படத்திற்கு 'சிட்டி ஆப் கோல்டு' எனப் பெயரிடப்பட்டு, அதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சித்தார்த் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் சிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அமலா ஷாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்: Tamil News 18Tamil News 18-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema