40 பைசாவில் சினிமா பார்த்த காலம் முதல் இன்று வரை... 56 ஆண்டுகளாக ரூ.50 டிக்கெட்
சினிமா தொழில்நுட்பம் டிஜிட்டல் உலகிற்கு மாறியுள்ள நிலையில், தூத்துக்குடி சத்யா தியேட்டர் மட்டும் பழைய ரீல் புரொஜெக்டர், ஃபிலிம் பெட்டிகள் மற்றும் பழைய இருக்கைகளுடன் சினிமாவின் பழைய நினைவுகளை பாதுகாத்து வருகிறது

தூத்துக்குடி சத்யா திரையரங்கம், சினிமா தொழில்நுட்பம் டிஜிட்டல் மயமாகிவிட்ட தற்போதைய சூழலிலும், சுமார் 56 ஆண்டுகளாக தனது பழைய ரீல் புரொஜெக்டர்கள் மற்றும் ஃபிலிம் பெட்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. சுமார் 40 பைசாவில் டிக்கெட் வழங்கப்பட்ட காலம் முதல் இன்று வரை, வெறும் 50 ரூபாய் கட்டணத்திலேயே அந்த திரையரங்கம் இயங்கி வருகிறது.
காலத்தால் மாறாத பழைய இருக்கைகள் மற்றும் பழைய காலத்து திரையிடல் முறைகளை இந்த திரையரங்கம் இன்றும் பாதுகாத்து வருகிறது. இதன் மூலம், சினிமா உலகின் பழைய நினைவுகளை அந்த திரையரங்கம் அழியாமல் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.