PulseNews
சினிமா

“வேறு யாராக இருந்தாலும் ஓடியிருப்பார்கள்” - சாய் தன்ஷிகா குறித்து விஷால்

விஷால் முதல் முறையாக இயக்கியுள்ள படம் ‘மகுடம்’. இப்படத்தை முதலில் ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக அவர் வெளியேற பின்பு விஷாலே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன், எமோஷன் கலந்த விறுவிறுப்பான படமாக உருவாகுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 99வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விஷால் தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகா குறித்து எமோஷ்னலாக பேசினார். அவர் பேசியதாவது, “ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு கட்டத்தில் இக்கட்டான சூழ்நிலை இருக்கும். அதாவது இனிமேல் எழுந்து வர முடியாது கரியர் முடிந்து விட்டது என்ற நிலை வரும். அப்படி ஒரு சூழ்நிலை எனக்கும் வந்தது. கிட்டத்தட்ட 14 மாதங்கள் நடிக்க முடியாமல் வீட்டில் இருந்தேன். அப்போது ஆர்பி சௌத்ரி சார் கூப்பிட்டு படம் குறித்து பேசினார். அவருக்கு மிகவும் கடமை பட்டிருக்கேன். இந்த படத்தால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடந்த 1 வருஷமாக சரியான தூக்கமே இல்லை. கடுமையாக உழைத்தேன். அந்த சமயத்தில் என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் இந்தப்படம் வருவதற்கு காரணம் என்னுடைய வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. அவருக்கு நன்றி. ஏனென்றால் வேறு யாராக இருந்தாலும் பிச்சிகிட்டு ஓடியிருப்பார்கள்” என்றார்.

Nakkheeran23 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“வேறு யாராக இருந்தாலும் ஓடியிருப்பார்கள்” - சாய் தன்ஷிகா குறித்து விஷால்
PulseNews சுருக்கம்

விஷால் இயக்கி நடித்துள்ள 'மகுடம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ரவி அரசுக்கு பதிலாக விஷால் இயக்கியுள்ள இப்படம், சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 99-வது படைப்பாக ஜி.வி. பிரகாஷ் இசையில் வரும் 14-ஆம் தேதி வெளியாகிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகரமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தனது வாழ்க்கையின் இக்கட்டான காலகட்டத்தில் 14 மாதங்கள் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தபோது, தன்னை ஊக்கப்படுத்திய தனது வருங்கால மனைவி சாய் தன்ஷிகாவுக்கு விஷால் நன்றி தெரிவித்தார். கடந்த ஒரு வருடமாகத் தூக்கமின்றி உழைத்த தனக்குத் துணையாக இருந்த அவர் இல்லையென்றால், வேறு யாராக இருந்தாலும் இந்தச் சூழலில் தன்னை விட்டு விலகிச் சென்றிருப்பார்கள் என்று விஷால் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema