PulseNews
சினிமா

ஷாக் நியூஷ்! Everest, LG பெருங்காயத்தில் விதிமீறல்கள்.. சற்றுமுன் FSSAI அதிரடித் தடை..!!!

எவரெஸ்ட் மற்றும் LG நிறுவனங்களின் பெருங்காயத்தூள் தரம் குறித்து எழுந்த புகார்களில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் புகார்களின் அடிப்படையில் FSSAI நடத்திய முதற்கட்ட ஆய்வகப் பரிசோதனையில், இரு நிறுவனங்களின் கலப்பு பெருங்காயப் பொருட்களிலும் விதிமீறல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தையில் உள்ள தரமற்ற தயாரிப்புகளை திரும்பப் பெற உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எவரெஸ்ட், LG பெருங்காயத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகள் ஆய்வில், எவரெஸ்ட் பெருங்காயத்தூள் தயாரிப்பில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவுகள் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. அதேபோல், LG பெருங்காயத்தூளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஸ்டார்ச் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: அட அட... இது வேற லெவல் காதல் பரிசு தாங்க! மணமகளுக்காக நிலவில் நிலம் வாங்கிய நாமக்கல் மாப்பிள்ளை....! இப்படி ஒரு பரிசை பொண்ணு எதிர்பார்த்திருக்குமா..? மேலும், இரு நிறுவனங்களின் மாதிரிகளிலும் ஆல்கஹாலில் கரையக்கூடிய சாற்றின் அளவு 0 முதல் 3 சதவீதம் வரையே இருந்ததாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி இந்த அளவு குறைந்தபட்சம் 5 சதவீதமாக இருக்க வேண்டும். தரமற்ற பொருட்களை திரும்பப் பெற உத்தரவு ஆய்வகப் பரிசோதனையில் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, சந்தையில் விற்பனைக்கு இருக்கும் தரமற்ற தயாரிப்புகளை உற்பத்தியாளர்களே முன்வந்து திரும்பப் பெற வேண்டும் என FSSAI உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தயாரிப்புகள் குறித்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், தவறுகள் தொடர்ந்தால் இரு நிறுவனங்களின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் FSSAI எச்சரித்துள்ளது. இதனால் FSSAI ஆய்வு தொடர்பான விவகாரம், பெருங்காயத்தூள் பயன்படுத்தும் நுகர்வோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதையும் படிங்க: BREAKING: வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த 4 குழந்தைகள் பரிதாப பலி..! பெற்றோர் கண்முன்னே துடிதுடித்த பிஞ்சுகள்.... திண்டுக்கல்லில் நடந்த அதிர்ச்சி..!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஷாக் நியூஷ்! Everest, LG பெருங்காயத்தில் விதிமீறல்கள்.. சற்றுமுன் FSSAI அதிரடித் தடை..!!!
PulseNews சுருக்கம்

எவரெஸ்ட் மற்றும் எல்.ஜி. ஆகிய நிறுவனங்களின் பெருங்காயத்தூள் தரம் குறித்து நுகர்வோர் அளித்த புகார்களைத் தொடர்ந்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அதிரடி ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வகப் பரிசோதனையில், இரு நிறுவனங்களின் கலப்பு பெருங்காயத் தயாரிப்புகளிலும் விதிமீறல்கள் இருப்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, சந்தையில் விற்பனைக்கு உள்ள தரமற்ற அந்தத் தயாரிப்புகளை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக இந்த முக்கிய நடவடிக்கையை FSSAI மேற்கொண்டுள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema