PulseNews
சினிமா

பணம், புகழை தேடாதே, ஒரு நெடியில் அனைத்தும் முடிந்துவிடும்: நேபாள பேரழிவு குறித்து நிவேதா பெத்துராஜ் கருத்து

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உள்ளூர் மக்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு வெளிநாட்டு பயணிகளும் சிக்கியுள்ள நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜூவின் பெற்றோர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க உதவ வேண்டும் என்றும் நிவேதா பெத்துராஜ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உடைப்பால், நேபாளத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை இல்லாத வகையில், நடந்த இந்த வெள்ளப்பெருக்கு பல கட்டிடங்களை அடித்துச்சென்ற நிலையில், வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனர். இந்த பேரழிவில் இதுவரை 392 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், பல வெளிநாட்டு பயணிகள் வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளதாக தகவலகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக 288 இந்தியர்கள் மற்றும் மலேசியக் குடியுரிமை பெற்ற யாத்ரீகர்கள் என 1,500க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 288 இந்தியர்களில், 49 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், கைலாச யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் திபெத் - நேபாள எல்லைப் பகுதிகளில் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில், கைலாச மலைக்கு யாத்திரை சென்றுவிட்டுத் திரும்பிய தனது பெற்றோர் உட்பட உறவினர்கள் பலர் நேபாள - திபெத் எல்லை காணவில்லை என்று நடிகை நிவேதா பெத்துராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கோவையை சேர்ந்த டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம், அவரது மனைவி தங்கலட்சுமி ஜோதிலிங்கம், ஆகியோருடன், மலேசிய குடியுரிமை பெற்ற அவரது உறவினர்களான ராமன் சுப்பிரமணியம், நீலவேணி மாரிமுத்து, முருகன் சுப்பிரமணியம், பத்மாவதி கோவிந்தசாமி ஆகியோரும் மாயமானதாக கூறியுள்ளார். இவர்களை பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள், மீட்புக் குழுவினர் அல்லது அரசு அதிகாரிகள் உடனடியாக விவேக் (+91 8903455735) என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள பதிவில், நேபாளத்திலும் திபெத் எல்லைப் பகுதியிலும் நடந்த இந்தத் துயரச் சம்பவத்தை பார்க்கும் போது, வாழ்க்கையில் எது மிக முக்கியமானது என்பது நமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. வாழ்க்கை என்பது பணத்தைத் துரத்துவதோ, புகழைத் தேடுவதோ அல்லது மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக அலைவதோ அல்ல. ஒரே ஒரு நொடியில் இவை அனைத்துமே நம்மை விட்டு போய்விடும். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுங்கள். உங்கள் வேகத்தை குறைத்து, உங்களுக்குள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நேசித்து மதியுங்கள். உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள் என பதிவிட்டுள்ளார்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பணம், புகழை தேடாதே, ஒரு நெடியில் அனைத்தும் முடிந்துவிடும்: நேபாள பேரழிவு குறித்து நிவேதா பெத்துராஜ் கருத்து
PulseNews சுருக்கம்

திபெத் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை உடைப்பினால் நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பாராத இயற்கை பேரிடரில் பல கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்குள்ள உள்ளூர் மக்களுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் சிக்கியுள்ளனர்.

இந்த வெள்ளத்தில் நடிகை நிவேதா பெத்துராஜின் பெற்றோரும் சிக்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களை மீட்பதற்கு உதவி கோரியுள்ள நிவேதா பெத்துராஜ், பணம் மற்றும் புகழைத் தேடி ஓடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், ஒரு நொடியில் அனைத்தும் முடிந்துவிடும் என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema