PulseNews
சினிமா

62-வது பிறந்த நாள், 62 புடவையில் அபிஷேகம் செய்த தம்பி: புடவைக்காகவே தனி வீடு வைத்திருக்கும் நடிகை நளினி

80-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை நளினி, தற்போது படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், அவரின் 62-வது பிறந்த நாளுக்காக அவரது சகோதரர் 62 புடவைகள் பரிசாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டி.ராஜேந்தர் இயக்கிய உயிருள்ளவரை உஷா படத்தின் மூலம் அறிமுகமானவர் நளினி. அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய இவர், திரையுலகில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த 2000-ம் ஆண்டு இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய நளினி விவாகரத்துக்கு பின் நடிக்க தொடங்கிய நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை வாய்ப்புகள் வர தொடங்கியது. தற்போது முக்கிய கேரக்டரில் நடிதது வரும் நளினி, அதிகம் விரும்பி வாங்குவது புடவை தான். எந்த ஊருக்கு ஷுட்டிங் சென்றாலும் அங்கு ஏதாவது ஒரு புடவை எடுத்துவிடுவதை தற்போதுவரை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் தினமும் ஒரு புதுப் புடவை கட்டுவது தான் தனது வழக்கம் என்றும் கூறியுள்ளார். தனது கணவர் வீட்டில் இருக்கும்போது இப்போதும் சரி நகைகள் மீது கூட தனக்கு ஆசை வந்தது இல்லை. ஆனால் புடவை மீது எனக்கு ஆர்வம் அதிகம். தினமும் ஒரு புது புடவை கட்டுவேன். ஆயிரக்கணக்கில் புடவை இருக்கிறது. இதற்காகவே ஒரு வீடு வைத்திருக்கிறேன். அங்கு தான் புடவை அனைத்தையும் வைத்திருக்கிறேன். என் பிள்ளைகள் கூட இன்று எவுதும் புது புடவை இருக்கிறதா? அல்லது நாங்கள் வாங்கி அனுப்பட்டுமா என்று கேட்கும் அளவுக்கு என் குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும் என்று ஒரு பழைய பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 28) தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடிய நளினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவரது தம்பி 62 புடவைகளை அவருக்கு பரிசாக கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஆயிரக்கணக்கில் புடவை வைத்துள்ள நளினிக்கு தற்போது மேலும் 62 புடவைகள் பரிசாக வந்துள்ளது. நளினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமூக வலைதளங்களி வைரலாகி வருகிறது. அதில் அவருக்கு புடவையால் யாரோ அபிஷேகம் செய்வது மாதிரி, புடவை குவியல் சுற்றி அவர் நெகிழ்ச்சியுடன் அமர்ந்து இருப்பது மாதிரியான அந்த வீடியோவை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகிறார்கள். View this post on Instagram A post shared by Abhinaya Shree (@abhinaya_shree_rs) என்ன நடந்தது, யார் கொடுத்த பரிசு என்று நளினியிடம் கேட்டால், “என் பிறந்தநாளை முன்னிட்டு என் தம்பி கார்த்திக் கொடுத்த மறக்க முடியாத பரிசு அது. அமெரிக்காவில் இருக்கும் அவர் என் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் ஆக வந்து, என்னை துாக்கத்தில் இருந்து எழுப்பி அந்த பிறந்தநாள் பரிசை கொடுத்தார். ஒன்றல்ல, இரண்டல்ல, 62 புடவைகளை பரிசாக கொடுத்தார். அந்த எண்ணிக்கை அதிகம் என்பதால் அப்படி என்னை சுற்றி குவிந்துவிட்டது. அந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது. அந்த பிறந்தநாளை, அந்த பரிசை, என் தம்பியை நான் எப்படி மறக்க முடியும் என்று கூறியுள்ளார்.

The Indian Express16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
62-வது பிறந்த நாள், 62 புடவையில் அபிஷேகம் செய்த தம்பி: புடவைக்காகவே தனி வீடு வைத்திருக்கும் நடிகை நளினி
PulseNews சுருக்கம்

எண்பதுகளில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நளினி, டி.ராஜேந்தரின் ‘உயிருள்ளவரை உஷா’ படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் இவருக்கு, 62-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சகோதரர் 62 புடவைகளை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது நடிகர் ராமராஜனைத் திருமணம் செய்துகொண்ட நளினி, இதற்கென தனி வீடு வைத்திருக்கும் அளவிற்கு அதிகப்படியான புடவை சேகரிப்புகளைக் கொண்டுள்ளார். தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் சகோதரர் வழங்கிய பரிசு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema