PulseNews
சினிமா

“மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் உணர்கிறேன்” - கமல் இரங்கல்

பிரபல பிரசாத் ஃபிலிம் லேபின் தொழில்நுட்ப தலைவர் சிவராமன் நேற்று உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின் வழியாக வளர்ந்தது சினிமா. அதன் அத்தனை மாற்றங்களிலும் பெரும்பங்களிப்பாற்றிய ஆளுமை, பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைந்து விட்டார். பிராசஸிங் மற்றும் கலர் கரெக்‌ஷன், ஒலித் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர். சினிமா சார்ந்த பல தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர காரணமானவர். ஃபிலிம் சுருளில் இருந்து திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாறியபோது சக கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார். பல முன்னணி ஒளிப்பதிவாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தொழில்நுட்ப வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அந்த வகையில் தன் வாழ்நாளில் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 500 படங்களையேனும் ஒலியே இல்லாமல் பார்த்திருப்பார். அது அத்தனை சுலபமான வேலை அல்ல. தென்னிந்திய சினிமா தனது தூண்களுள் ஒன்றை இழந்திருக்கிறது. சாதாரணத் தூண் அல்ல. கல் தூண். மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் உணர்கிறேன்” என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார். கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின் வழியாக வளர்ந்தது சினிமா. அதன் அத்தனை மாற்றங்களிலும் பெரும்பங்களிப்பாற்றிய ஆளுமை, பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைந்து விட்டார். பிராசஸிங்... pic.twitter.com/fGEeNKc0Jv — Kamal Haasan (@ikamalhaasan) August 18, 2026

Nakkheeran16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் உணர்கிறேன்” - கமல் இரங்கல்
PulseNews சுருக்கம்

பிரசாத் ஃபிலிம் லேபின் தொழில்நுட்பத் தலைவராகப் பணியாற்றி வந்த எஸ். சிவராமன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். சினிமாவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல தசாப்தங்களாக முக்கிய பங்காற்றிய இவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறை கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கி டிஜிட்டல் காலம் வரை அடைந்த தொழில்நுட்ப மாற்றங்கள் அனைத்திலும் சிவராமனின் பங்களிப்பு இருந்ததை கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார். அவரது மறைவு மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema