PulseNews
சினிமா

‘பந்தயம் தான் நம்மள காப்பாத்துது...’ - வரவேற்பை பெறும் சூரி படம் டீசர்!

செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுஹாஸ், சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகிறது. இதனால் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இராமநாதபுர கடலில் பல மாதங்களாக நடந்தது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல்களை பொறுத்தவரை கடந்த ஜூலையில் வெளியான ‘மண்டாடி மண்டாடி’ முதல் பாடல் சூரி நடனம் கவனம் பெற்றது. இதையடுத்து சமீபத்தில் வெளியான ‘உசுரே நீதான் புள்ள...’ பாடல் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் சத்யராஜ் பின்னணி குரலில், ‘நாம பந்தயத்த காப்பாத்தல, பந்தயம் தான் நம்மள காப்பாத்துது...’ என ஆரம்பிக்கும் டீசர் படகு போட்டி கதாபாத்திர அறிமுகம் என காட்சிகள் விரிகிறது. மேலும் பகை, சண்டை, விபத்து, காதல் என அடுத்தடுத்து விஷயங்கள் வருகிறது. அதிரடியான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாக இப்படம் உருவாகியுள்ளது போல் டீசர் உணர்த்துகிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.

Nakkheeran13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
‘பந்தயம் தான் நம்மள காப்பாத்துது...’ - வரவேற்பை பெறும் சூரி படம் டீசர்!
PulseNews சுருக்கம்

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திர விஜய் மற்றும் அச்சுத் குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடலில் நடக்கும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் டீசர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema