“உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
Actor Mammootty Madurai Bypass: நள்ளிரவில் மதுரை பைபாஸில் வழிதெரியாமல் தவித்த வாகனத்திற்கு வழிகாட்டிய பின்னரே, காரின் உள்ளே இருந்தது மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி என்பதே தனக்குத் தெரிந்தது எனச் சாலைப் பணியாளர் பாண்டியன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அழகான தருணம் எனப் பூரிப்புடன் தெரிவித்தார்

மதுரை பைபாஸ் சாலையில் நள்ளிரவில் வழி தெரியாமல் தவித்த ஒரு வாகனத்திற்கு, சாலைப் பணியாளர் பாண்டியன் என்பவர் உதவி செய்து வழிகாட்டியுள்ளார். அந்த வாகனத்தில் பயணித்தது மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டி என்பது, உதவி செய்த பின்னரே தனக்குத் தெரிய வந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மம்மூட்டிக்கு உதவிய அந்த தருணம் தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அழகான நிகழ்வாக அமைந்ததாகப் பாண்டியன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தற்செயலாக நடந்த இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.