PulseNews
சினிமா

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் புஷ்கர் - காயத்ரி. கணவன் மனைவியான இவர்கள் இருவரும் தங்கள் ஆரம்ப கால திரைப்பட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.

யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர்கள் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

விளம்பரம் இயக்குவதே இலக்கு:

எங்களுக்கு முதலில் விளம்பரம் இயக்க வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. நாங்கள் இருவரும் விளம்பரம் எடுக்கும் நிறுவனத்தில் உதவி இயக்குனராக இணைந்தோம். கல்லூரி இறுதியாண்டு படிக்கும்போதே சேர்ந்துவிட்டோம்.

அங்கு இருந்து ஒரு வருடம் பணியாற்றி விளம்பரங்களும் எடுக்கத்தொடங்கினோம். கல்லூரியில் இருக்கும்போது படத்திற்கு ஒரு படையாக செல்வோம். விளம்பரத்தில் ஒரு ஆர்வம் இருந்தது. விளம்பரத்தில் பணியாற்றினால் ஒரு ப்ராசசை நீங்கள் எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

பல் விளக்கிய தயாரிப்பாளரிடம் கதை:

விளம்பரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே திரைக்கதை எழுத தொடங்கிவிட்டோம். அப்போது ஒன்றுமே தெரியாது. துறையில் யாரையுமே தெரியாது. தயாரிப்பாளர் வீட்டிற்கு எல்லாம் சென்றிருக்கிறோம்.

வளசரவாக்கத்தில்தான் இருந்தேன். ஏஎம் ரத்னம் சார் அங்கேதான் வீடு கட்டி வந்திருந்தார். காலையில் 8.30 மணிக்கு அவர் வீட்டு வாசலில் நின்றோம். அவர் அப்போதுதான் பல் விளக்கிக் கொண்டே வந்தார். சார் எங்ககிட்ட கதை இருக்கு, கதை இருக்குனு சொன்னோம்.

அவர் ரொம்ப ஸ்வீட். ஆபீஸ்ல வந்து பாருங்க என்றார். 10 நிமிஷம் கதை கேளுங்க என்றோம். இந்த மாதிரி குடும்பத்துக்காக பண்றேன். நான் ரிஸ்க் எடுக்கலாம். இந்த கதையை எப்படி தியேட்டருக்கு கொண்டு வருவீங்க? ஏனென்றால் அது மெயின்ஸ்ட்ரிம் படம் கிடையாது.

குருட்டு தைரியம்:

அதன்பிறகுதான் பிலிம் ஸ்கூல்ல படிக்கலாம்னு அமெரிக்காவிற்கு போனோம். அப்போது சினிமா ஆசை வந்துடுச்சு. ஏவிஎம் போயிட்டு கதை சொல்லிட்டு வந்தோம். இப்போ யோசிச்சா என்ன தைரியத்துல ஏவிஎம்ல போயிட்டு அந்த கதையை சொன்னோம்னு தோணுது.

தி.நகர்ல குஷ்பு படம் நடிச்சுட்டு இருந்தாங்க. அவங்க அப்போ தயாரிப்பாளர் ஆகல. நாங்க அவங்ககிட்ட போயிட்டு நடிக்கவும் செய்ங்க, தயாரிக்கவும் செய்ங்க என்றோம். அவங்க ஸ்வீட்டா பசங்க கதை வச்சுருக்காங்க, கேட்குறீங்களானு ஒரு தயாரிப்பாளர்கிட்ட கேட்டாங்க. அப்போது குருட்டு தைரியம். கதையும் நார்மலா சொன்னோம்.

இவ்வாறு அவர்கள் பேசினார்.

ஓரம்போ என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகிய இவர்கள் இருவரும் வ குவார்ட்டர் கட்டிங் என்ற படத்தை இயக்கினார். அதன்பின்பு,இவர்கள் இணைந்து இயக்கிய விக்ரம் வேதா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதே படத்தை இந்தியிலும் இயக்கியிருந்தனர்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
PulseNews சுருக்கம்

தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி, தங்களின் திரையுலக பயணத்தின் ஆரம்ப கால நினைவுகளை ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டனர். தாங்கள் இருவரும் விளம்பரத் துறையில் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றிய அனுபவங்களையும், ஆரம்பத்தில் விளம்பரங்களை இயக்குவதையே நோக்கமாகக் கொண்டிருந்ததையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

திரைத்துறைக்கு வரும் முன் விளம்பர நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்திலிருந்தே தங்கள் கனவுகள் இருந்ததாக இந்த நட்சத்திர ஜோடி குறிப்பிட்டது. கல்லூரி இறுதியாண்டில் இருந்தபோதே தாங்கள் திரைத்துறைப் பணிகளில் ஈடுபட்டது குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர்கள் இந்த நேர்காணலில் மனம் திறந்து பேசினர்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema