உனக்கு பாட்டு எழுத தெரியாதா? வெளியே போ...; துரத்திய இயக்குனரை பின்னாளில் பழி வாங்கிய நாகேஷ்
தமிழ் சினிமாவில் எண்ணற்ற ஹிட் பாடல்களைப் படைத்தவர் கவிஞர் வாலி. தனது வாழ்நாளின் இறுதிவரை “வாலிபக் கவிஞர்” என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர், நடிகர் நாகேஷுடன் மிகவும் நெருங்கிய நட்பில் இருந்தார். சினிமாவில் இருவரும் பிரபலமடைவதற்கு முன்பே, வறுமையையும் கஷ்டங்களையும் பகிர்ந்து கொண்டு வாழ்ந்தவர்கள். இதை வாலியே பல பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார். அந்த வகையில், பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வாலி, நாகேஷுடன் தனக்கு ஏற்பட்ட நட்பு மற்றும் ஆரம்ப கால சினிமா அனுபவங்களைப் பற்றி சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். 1958ஆம் ஆண்டு காலகட்டத்தில், கோல்டன் ஸ்டுடியோவில் நாகேஷை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது தனது நண்பர் அமரர் பி. கோபாலகிருஷ்ணன் மூலமாக நாகேஷ் தனக்கு அறிமுகம் ஆனார். அந்த நேரத்தில் நாகேஷ் ரயில்வேயில் பணியாற்றி வந்த அவர், சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டு திரைப்படத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். பின்னர் அவர் நாடகத்தில் தையு நாகேஷ் என்ற கேரக்டரில் நடித்து “நாகேஷ்” என்ற பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானது. 1959-60 காலகட்டத்தில் நான், நாகேஷ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஆகியோர் ஒரே அறையில் தங்கி, தங்களது வறுமையைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்த காலம். அந்த நாட்களில் நான் பெரும்பாலும் அறையிலேயே படுத்துக் கொண்டு தூங்கிக்கொண்டிருப்பேன். நாகேஷ் வெளியில் இருந்து பேப்பர், பேனா உள்ளிட்டவற்றை வாங்கி வந்து, “ஏதாவது பாட்டு எழுதுடா” என்று சொல்வான். பால் வாங்கி கொடுப்பான். நான் குடித்துவிட்டு மீண்டும் தூங்கிவிடுவேன். தூங்கிவிடுவதைப் பார்த்து, “நீ உருப்படவே மாட்ட” என்று கிண்டலாகச் சொல்வான். அதற்கு, “உருப்படும்போது உருப்படலாம்” என்று பதில் சொல்வேன். ஒருநாள் எங்கள் அறைக்கு வந்த ஒருவர், இயக்குநர் பி. நீலகண்டன் சொந்தமாக ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வருவதாகவும், அந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாகவும், அண்ணா கதை மற்றும் வசனம் எழுதுவதாகவும் கூறி, என்னை பாடல் எழுத அழைப்பதாக சொன்னார். அந்த நிறுவனத்தின் அலுவலகம் எங்கே இருக்கிறது என்பதே எனக்கு தெரியாது. நாகேஷ் என்னை அங்கு அழைத்து சென்றான். அந்த அலுவலகம் வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் இருந்தது. நாங்கள் இருவரும் இயக்குநர் பி. நீலகண்டனின் அறைக்குள் சென்றபோது, “உங்களில் யார் வாலி?” என்று இயக்குநர் கேட்டுள்ளார். அதற்கு, “நான்தான்” சொன்னேன். பின்னர் நாகேஷை சுட்டிக்காட்டி, “இவர் நாகேஷ். பல படங்களில் நடித்திருக்கிறார். என்னுடைய நண்பர்” என்று சொன்னேன். அப்போது அந்த இயக்குனர்,, “நீ பாட்டு எழுத வரவில்லை. வெளியே போ” என்று சொன்னார். நாகேஷை தனது அறையில் இருந்து வெளியே அனுப்பிய அதே இயக்குநர் பி. நீலகண்டன், பின்னாளில் நாகேஷின் கால்ஷீட்டுக்காக பல மாதங்கள், பல வருடங்கள் காத்திருந்ததாக வாலி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற கவிஞர் வாலி, நடிகர் நாகேஷுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். திரையுலகில் தங்களுக்குப் புகழ் கிடைப்பதற்கு முன்பே, வறுமையையும் கஷ்டங்களையும் இருவரும் ஒன்றாகப் பகிர்ந்து வாழ்ந்ததை வாலி பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பாடல் எழுதத் தெரியவில்லை என்று கூறி ஒரு இயக்குனர் தன்னை வெளியேற்றிய சம்பவத்தை நாகேஷ் ஒருமுறை எதிர்கொண்டார். பிற்காலத்தில், அந்த இயக்குனரை நாகேஷ் பழிவாங்கியதாக வாலி ஒரு பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து விவரித்துள்ளார்.