“கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்கூடாது” - குரு சோமசுந்தரம் விருப்பம்
சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், விஜய் விஸ்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாரிஸ் கஃபே’. கண்மனி ரங்கநாதன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கே என்பவர் இசையமைத்துள்ளார். ஆணவக்கொலையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் மித்ரன் ஜவகர், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன், சமூக ஆர்வலர் கௌசல்யா சங்கர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய குரு சோமசுந்தரம், “இந்தப் படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். டைரக்டர் சொன்னதுமே எனக்கு ரொம்ப பிடிச்சு நான் ஒத்துக்கிட்டேன். நிறைய புது படத்தின் இயக்குநரின் மனைவி வேலைக்கு போவாங்க ஆனா இந்த படத்தோட இயக்குநரின் மனைவி இந்த படத்துக்கு ப்ரடியூசர் ஆயிட்டாங்க, அது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் படம் கன்டென்ட் ஓரியண்டட் படம். அனுமோல் வேற ஒருத்தவங்கள அழகா இருக்கன்னு சொன்னதும் கடுப்பாயிட்டாங்க அது அன்பான சண்டை. இந்த படத்துடைய எடிட்டருக்கு நன்றி. இசையமைப்பாளர் கே-க்கும் நன்றி. முக்கியமா ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் விக்கி இந்த படத்துல ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு, எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி நடிக்கிறார். ரொம்ப கஷ்டமான ரோல் அத ரொம்ப நல்லா பண்ணின அவருக்கு வாழ்த்துக்கள். கௌசல்யா அவர்கள் வந்ததுக்கு நன்றி. பெண்களை மதிக்காத நாடு கண்டிப்பா வளராது, கௌசல்யா மாதிரி இன்னொருத்தங்க இங்கே இருக்கக்கூடாது, நம்ம மாறினால்தான் எல்லாமே மாறும் இந்த படம் அதைப்பற்றி தான் பேசும்.” என்றார்.

சரஜ் சீலன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல் மற்றும் விஜய் விஸ்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாரிஸ் கஃபே'. கண்மனி ரங்கநாதன் தயாரித்துள்ள இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குனர் மித்ரன் ஜவகர், ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் மற்றும் சமூக ஆர்வலர் கௌசல்யா சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய குரு சோமசுந்தரம், கௌசல்யாவைப் போன்ற பாதிப்புகள் இனி யாருக்கும் ஏற்படக்கூடாது எனத் தனது விருப்பத்தைப் பகிர்ந்து கொண்டார்.