PulseNews
சினிமா

ஐயோ... இப்படியா ஆகணும்! வாழை மரத்தில் மறைந்திருந்த எமன்! மரத்தை வெட்டிய தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.... நொடியில் துடிதுடித்து இறந்த 8 வயது மகன்...!!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் வாழை மரத்தை வெட்டியபோது குளவிக்கூடு கலைந்து, தந்தை மற்றும் 8 வயது மகன் மீது குளவிகள் சரமாரியாக தாக்கின. இதில் படுகாயமடைந்த சிறுவன் நிச்சித், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். தந்தை வெங்கடேஷுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாழை மரத்தில் இருந்த குளவிக்கூடு சிவமொக்கா மாவட்டம் அட்டிசாரா கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது வீட்டின் பின்புறம் இருந்த வாழை மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன், 2-ம் வகுப்பு படிக்கும் அவரது 8 வயது மகன் நிச்சித்தும் இருந்துள்ளான். இதையும் படிங்க: கள்ளக்காதலில் குஜாலக இருந்த காவலர்! தகராறில் தம்பதியைப் போட்டுத் தள்ளி... நள்ளிரவில் விவசாய நிலத்தில் புதைத்த கொடூரம் ..! பகீர் பின்னணி!! மரத்தை வெட்டும் பணியின்போது எதிர்பாராதவிதமாக அதில் இருந்த குளவிக்கூடு கலைந்தது. இதனால் கூட்டில் இருந்த குளவிகள் சீறியெழுந்து வெங்கடேஷையும் சிறுவன் நிச்சித்தையும் விடாமல் கொட்டியதாக கூறப்படுகிறது. இருவரும் பலத்த காயங்களுடன் அலறித் துடித்தனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் விரைந்து சென்று குளவிகளை விரட்டினர். பின்னர் தந்தை, மகன் இருவரையும் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் நிச்சித்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை விசாரணை படுகாயமடைந்த வெங்கடேஷுக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள மெக்கான் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், குளவி தாக்குதல் தொடர்பாக சாகர் புறநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாழை மரத்தில் குளவிக்கூடு இருந்தது தெரியாமல் வெட்டியபோது தாக்குதல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஐயோ... இப்படியா ஆகணும்! வாழை மரத்தில் மறைந்திருந்த எமன்! மரத்தை வெட்டிய தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.... நொடியில் துடிதுடித்து இறந்த 8 வயது மகன்...!!!
PulseNews சுருக்கம்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் அட்டிசாரா கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், தனது வீட்டின் பின்புறம் இருந்த வாழை மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்தில் இருந்த குளவிக்கூடு எதிர்பாராதவிதமாக கலைந்ததால், வெங்கடேஷ் மற்றும் அவருடன் இருந்த 8 வயது மகன் நிச்சித் ஆகியோரை குளவிகள் சரமாரியாகத் தாக்கின.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன் நிச்சித், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். காயமடைந்த தந்தை வெங்கடேஷ் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema