PulseNews
சினிமா

“சினிமாவை எப்போதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” - யஷ் அறிவுரை!

'கே.ஜி.எஃப்' யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக்’. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த மூன்று பேரும் பாடல்களை கவனித்திருக்க பின்னணியை இசையை மட்டும் ரவி பஸ்ரூர் கவனித்திருக்கிறார். இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் உள்ள மல்லா ரெட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் யஷ் கலந்து கொண்டு பேசுகையில், “சினிமாவை எப்போதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை. வாழ்க்கையில் நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதைக் கனவு காணுங்கள், அதற்காக உழையுங்கள். அப்போது உங்களுக்கு மரியாதையும் வெற்றியும் கிடைக்கும். எதாவது ஒன்றில் நாம் தோல்வியடைந்தால், அதற்காக உலகத்தைக் குறை சொல்லாதீர்கள், அதற்கு நாமேதான் பொறுப்பு” என்றார். இதனிடையே படத்தின் முன்னோட்டங்களில் பெண்கள் குறித்து இடம் பெற்ற காட்சிகள் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அது குறித்துபேசிய அவர், “சமூகம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், அல்லது இதை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். ஆனால் எல்லோருடைய பார்வையும் பெண்கள் மீதே இருக்கும். ஒவ்வொரு பெண்ணும் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும், தங்கள் எண்ணங்களையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்த முடியும், மேலும் இந்தச் சமூகத்தில் வெற்றிபெற முடியும் என்பதை இப்பட இயக்குநர் நிரூபிப்பார். டிரெய்லரில் காட்டப்படுவதைப் போலல்லாமல், இந்தப் படத்தில் பெண்களுக்கு ஒரு வலுவான குரல் இருக்கிறது. படத்தைப் பார்த்து மகிழுங்கள். குறிப்பாகப் பெண்கள், நிச்சயம் மிகவும் ரசிப்பாரக்ள்” என்றார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“சினிமாவை எப்போதும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதீர்கள்” - யஷ் அறிவுரை!
PulseNews சுருக்கம்

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்ஸிக்'. இதில் நயன்தாரா, கியாரா அத்வானி மற்றும் ஹூமா குரேஷி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா மற்றும் தனிஷ்க் பாக்சி ஆகியோர் இசையமைத்துள்ளனர். இதில் பின்னணி இசையை மட்டும் ரவி பஸ்ரூர் கையாண்டுள்ளார்.

இப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது. சினிமாவை எப்போதும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என யஷ் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema