வென்றதா விஷாலின் மகுடம் சூடும் முயற்சி?- 'மகுடம்' விமர்சனம்
சில ஆண்டுகளாகவே தோல்வி ப் படங்கள் கொடுத்து துவண்டு கிடந்த நடிகர் விஷாலுக்கு சென்ற ஆண்டு வெளியான மதகஜராஜா திரைப்படம் பெரும் வெற்றி பெற்று அவரை மீண்டும் வெற்றிப் பாதைக்கு திருப்பியது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்பொழுது அதை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் மகுடம் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. விஷால் தானே நடித்து இயக்கி இருக்கும் இந்த மகுடம் திரைப்படம் எந்த அளவு வரவேற்பை பெற்றிருக்கிறது? மெடிக்கல் ரெப்பாக இருக்கும் விஷால் மனைவி துஷாரா விஜயன் மற்றும் மகன் மகளோடு நடுத்தர குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். மிகவும் நேர்மையான மனிதராக இருக்கும் இவர் அன்றாட பிழைப்பை நடத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு இருக்கும் நேரத்தில் மாமனார் தம்பி ராமையாவின் வலியுறுத்தல் பேரில் செகன்ட் ஹேன்ட் கார் ஒன்றை வாங்கி அந்த காரில் தன் மனைவி மக்களுடன் டூர் ஊட்டிக்கு டூர் செல்கிறார். சென்ற இடத்தில் மர்ம நபர்களால் துஷாரா விஜயன் அவரது மகள் கொல்லப்படுகின்றனர். இதனால் வெகுண்டு எழும் விஷால் அனைவரையும் துவம்சம் செய்கிறார். இந்த கொலைக்கு காரணமாக தன் தந்தை மற்றொரு விஷால் தான் காரணம் என எண்ணும் அவர் தன் தந்தை விஷாலை பற்றி தன் மகனிடம் விவரிக்கிறார். அப்பா விஷால் விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய தாதாவாக இருக்கிறார். அவருடைய மனைவி அஞ்சலியுடன் வாழ்ந்து வர அங்கு வில்லன்களுடன் அவருக்கு நடக்கும் துரோகத்தால் அஞ்சலி கொல்லப்படுகிறார். இந்த விஷயம் மகன் விஷாலுக்கு தெரியாமல் தன் தந்தையை கெட்டவன் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த விஷயத்தை தன் மகனிடம் கூறிவிட்டு இருவரும் ஒதுங்கி வாழ்ந்து வரும் நேரத்தில் தந்தை விஷால் மகன் விஷாலை பார்க்க வரும் நேரத்தில் வில்லன் கும்பல் இவர்களை சுற்றி வளைக்கிறது. தந்தை விஷாலின் உண்மை முகம் மகன் விஷாலுக்கு தெரிந்ததா, இல்லையா? சுற்றி வளைத்த வில்லன் கும்பல்களிடமிருந்து தந்தை மற்றும் மகன் விஷால் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை. சீனாவில் இருந்து போலி உதிரி பாகங்கள் தயாரித்து அதன் மூலம் இந்தியாவில் பல்வேறு விபத்துகளை ஏற்படுத்தும் மாஃபியா கும்பல்களைப் பற்றி கதை கருவை எடுத்துக்கொண்டு அதை விட்டுவிட்டு தேவையில்லாமல் நாயக பெருமை பில்டப் காட்சிகள் ஆக்சன் காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் என ட்ராக் மாறி வேறு ஒரு படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் விஷால். இயக்குனராக தான் இயக்கியிருக்கும் முதல் படம் என்பதை இத்திரைப்படம் உருவாகி இருப்பதிலேயே அது அப்பட்டமாக தெரிகிறது. பல இடங்களில் முதிர்ச்சி இல்லாமல் காட்சிகளை பல திசைகளில் திருப்பி யு டர்ன் அடித்து எங்கெங்கோ சென்று பின்பு கடைசியில் ஒரு புள்ளியில் கதைக்குள் நுழைகிறது திரைப்படம். அதற்குள் மொத்த திரைப்படமும் முடிந்து விடுகிறது. இதனாலேயே சொல்ல வந்த விஷயம் மக்களுக்கு போய் சேரவில்லை. குறிப்பாக மூன்று மணி நேரத்திற்கு மேல் படம் ஓடுகிறது. படத்தை இஷ்டம் மேணிக்கு எடுத்து தள்ளி இருக்கிறார் இயக்குனர் விஷால். இது ஒரு ஆக்சன் படமாகவும் இல்லாமல் குடும்ப படமாகவும் இல்லாமல் சென்டிமென்ட் படமாகவும் இல்லாமல் கேங்ஸ்டர் படமாகவும் இல்லாமல் அனைத்து விதமான படமாகவும் கலந்து கட்டி மொத்தத்தில் சொதப்பல் நிறைந்த படமாக மாறி இருக்கிறது. நாயகனாக விஷால் பாஸ் மார்க் வாங்கி இருந்தாலும் இயக்குனராக விஷாலுக்கு இன்னமும் பயிற்சி தேவைப்படுகிறது. சின்ன சின்ன காதல் செண்டிமெண்ட் மற்றும் குடும்ப காட்சிகளை கொஞ்சம் சிறப்பாகவே காட்சிப்படுத்தி இருந்த இயக்குனர் விஷால் அதை ஒரு சேர கோர்த்து திரைக்கதைக்குள் சரியான அளவில் நேர்த்தியாக உட்பகுத்தி ரசிக்கும்படி அமைக்காதது படத்திற்கு பெரிய மைனஸ் ஆக மாறி இருக்கிறது. அதேபோல் படத்தின் நீளமும் எப்போ டா படம் முடியும் என்று இருப்பதும் இன்னொரு மைனஸ். வேறு ஒரு இயக்குனர் கையில் இருந்த திரைப்படத்தை டேக் ஓவர் செய்து விஷால் தானே இயக்கி நடித்து இருப்பதை தவிர்க்க எண்ணமும் கூட யோசித்து இருக்கலாம். நாயகனாக நடிகராகவும் விஷால் வழக்கம் போல் பாஸ் மார்க் வாங்குகிறார். தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான முறையில் நடிப்பையும் குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளிலும் அதகலப்படுத்தி இருக்கிறார். நடிப்பில் இவரது அர்ப்பணிப்பு நெகிழச் செய்கிறது. குறிப்பாக மூன்று வேடங்களிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தை தன் தோள்மேல் சுமந்து இருக்கிறார். நாயகி துஷாரா விஜயின் வழக்கம் போல் துருதுரு கதாநாயகியாக மிளிர்கிறார். அழகாக இருக்கிறார் அளவாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தலையை காட்டி இருக்கும் மற்றொரு நாயகி அஞ்சலி இவரும் துருதுரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இரண்டாம் பாதி முழுவதையும் தன் தோள் மேல் சுமந்து கடத்தி இருக்கிறார். விஷாலுக்கு டப் கொடுத்து நடித்து இருக்கிறார். விஷாலின் நண்பராக வரும் ஜான் விஜய் ஜெயபிரகாஷ் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். விஷாலின் மாமனாராக வரும் தம்பி ராமையா சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து சிறப்பான முறையில் பங்களிப்பு செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உச்சந்தி மாமு பாடல் சிறப்பு. வழக்கம்போல் பின்னணி இசையும் பின்னி இருக்கிறார். அபிநந்தன் மற்றும் ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளை மிக மிக சிறப்பாக காட்சிப்படுத்தி உள்ளனர். கதை கரு என்று பார்த்தால் ஒரு சிறப்பான கதை கருவாக இருக்கும் இந்த கதையில் கதை கருவைப் போன்றே சிறப்பான முறையில் திரைக்கதையும் அமைத்திருந்தால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படம் மாறி இருக்கும். படம் சரியான இடத்தில் ஆரம்பித்து பின்பு தடம் மாறி எங்கெங்கோ சென்று எங்கெங்கோ போய் எப்படியோ முடிந்திருப்பது பாடத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது. நடிகர் விஷால் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் மகுடம் சூடும் முயற்சி செய்து இப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் தற்பொழுது நடிப்பில் மட்டுமே அவருக்கு மகுடம் கிடைத்திருக்கிறது. இயக்கத்தில் மகுடம் கிடைக்க இன்னும் பயிற்சி செய்து வெகு தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. மகுடம் - பொருத்தமான தலைக்கு வெயிட்டிங்!

தொடர் தோல்விகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியான 'மதகஜராஜா' படத்தின் மூலம் விஷால் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். அந்த வெற்றியைத் தக்கவைக்கும் முயற்சியாக, அவரே நடித்து இயக்கிய 'மகுடம்' திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
மெடிக்கல் பிரதிநிதியாக பணிபுரியும் விஷால், தனது மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் நடுத்தர வர்க்க வாழ்க்கையை நடத்துகிறார். இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே எந்த மாதிரியான வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.