சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் அமலா ஷாஜி; பிரபல ஹீரோ படத்தில் இணைந்தார்!
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வருபவர் அமலா ஷாஜி. இளம் வயதிலேயே 4.2 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கும் அவர் தன்னுடைய டிரெண்டிங் ரீல்ஸ்களால் இன்றைய இளைஞர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார். விக்ரம் பிரபு-வின் 26வது படத்தின் இணைந்துள்ளார். இப்படம் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சித்தார்த் என்பவர் இயக்குகிறார். தங்கத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் இணைந்தது குறித்து அமலா ஷாஜி நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளர். அவர் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு காலத்தில் நான் கனவாக மட்டுமே கண்ட ஒன்று, இப்போது நனவாகி வருகிறது. இது என் முதல் திரைப்படம். இந்தத் தருணத்தை நான் என்றென்றும் போற்றுவேன். இந்த அழகான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைகிறேன். அதோடு அளவற்ற நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்து, என் பயணத்தின் இந்தத் தொடக்கத்தை இவ்வளவு சிறப்பானதாக மாற்றியமைத்த எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்த என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு சிறிய தொடக்கம் தான், ஆனால் மிகவும் சிறப்பான ஒன்று” எனக் குறிப்பிட்டுள்ளார். செல்போனில் இருந்து சினிமாவுக்கு உயரிய அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 4.2 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள அமலா ஷாஜி, தனது டிரெண்டிங் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தற்போது அவர் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
விக்ரம் பிரபு நடிக்கும் 26-வது படத்தில் அமலா ஷாஜி இணைந்துள்ளார். சித்தார்த் இயக்கும் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தங்கத்தை மையக்கருவாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படத்தில் இணைந்தது குறித்து அமலா ஷாஜி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.