PulseNews
சினிமா

Surya Viswanath and Sons Live Review Update: மனதிற்கு இதமான ஒரு குடும்ப படம் - விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் விமர்சனம்

கருப்பு படத்தின் மூலம் மீண்டும் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ள நடிகர் சூர்யா அடுத்து பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், அவரது நடிப்பில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் வாத்தி, துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் என வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் ராதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றது. சூர்யா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான கஜினி படத்தில் நடித்த சஞ்சய் என்ற கேரக்டரில் துப்பாக்கி சுடும் வீரராக நடிக்கிறார். அவரை விட, 21 வயது இளையவராக நடிக்கும் மமிதா பைஜூவுக்கும் இவருக்கும் இடையிலான காதல் கலாட்டா தான் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த படம் ரிலீஸ்ககு முன்பே பாசிட்டீவாக விமர்சனங்களை பெற்றிருந்தது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Surya Viswanath and Sons Live Review Update: மனதிற்கு இதமான ஒரு குடும்ப படம் - விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் விமர்சனம்
PulseNews சுருக்கம்

கருப்பு படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூர்யா நடிப்பில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. தனுஷின் 'வாத்தி' மற்றும் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க, ராதிகா மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் குடும்பங்கள் ரசிக்கும்படியான மனதிற்கு இதமான ஒரு படைப்பாக அமைந்துள்ளதாக முதல் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema