அரசியல் ஆட்டத்தை தொடங்கிய நடிகர் தனுஷ்: தொகுதி வாரியாக மாஸ்டர் பிளான்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது அவர் 'ஓம்' என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அவர் லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்திலும், ஆஸ்தான இயக்குநரான வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கப் போகிறார் என்கிற பேச்சுக்கள் சமீப நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனைக் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தும் விதமாக, அவரது பிறந்தநாளை ஒட்டிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தனுஷ் பேசியது அமைந்தது. அந்த விழாவில் அவர், "இங்கே இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். நம் ஒற்றுமைக்குப் பெரிய சக்தி உண்டு. அதற்கு நோக்கமும் உண்டு. சும்மா வந்தோம், என்னைச் சந்தித்தோம், புகைப்படம் எடுத்தோம் என மட்டும் இருக்கக் கூடாது. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் சிக்கல்களில் இருந்தால் உதவுங்கள். அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்யுங்கள். அதற்கு எல்லாரும் கைகோர்க்க வேண்டும். நீங்கள் அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன். என்னை இன்னும் வேகமாக ஓட வைக்கும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி" எனக் கூறியிருந்தார். இது அவர் அரசியலில் குதிக்க எடுத்து வைக்கும் முதல் அடி என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், நடிகர் தனுஷ் கட்சித் தொடங்க இருப்பதை உறுதி செய்யும் விதமாக அவரது நற்பணி மன்றம் சார்பில் வெளியான அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகின்றது. அந்த அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் புதிதாக நற்பணி மன்றங்களைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும் மன்ற நிர்வாகியைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கிளை நற்பணி மன்றங்களைத் தொடங்கி உறுப்பினர்களை உடனடியாக இணையுமாறு தலைமை மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நடிகர் தனுஷின் நற்பணி மன்றத்தின் அகில இந்தியச் செயலாளர் பி. ராஜா மற்றும் தலைவர் சுப்ரமணியம் சிவா ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை மாவட்டப் பொறுப்பாளர் ஜி. சங்கர் தலைமையின் கீழ், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் நற்பணி மன்றக் கிளைகளை அமைத்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளை விரைந்து முடிக்குமாறு ரசிகர்களுக்கும் நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது அரசியல் வருகைக்கு தனுஷ் ஆயத்தமாகி வருகிறார் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழும் தனுஷ், 'ஓம்', 'லப்பர் பந்து' இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவின் படம் மற்றும் வெற்றி மாறனின் 'தமிழ் முருகன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது பிறந்தநாள் விழாவில் அவர் ஆற்றிய உரை அவரது அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு உதவுமாறும், ஒற்றுமையுடன் செயல்படுமாறும் அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டது அரசியல் களம் புகும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், தனுஷின் அகில இந்திய நற்பணி மன்ற நிர்வாகிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கிளை நற்பணி மன்றங்களைத் தொடங்கி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜி. சங்கர் தலைமையிலான இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், தனுஷ் தனது அரசியல் பயணத்தைத் தொகுதி வாரியாகத் திட்டமிட்டுத் தொடங்கியுள்ளதாகப் பேசப்படுகிறது.