“என்னுடைய சினிமா போராட்டம் சென்னையில் தான் தொடங்கியது” - ரவி தேஜா
இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘இருமுடி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 21 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பில் வெளியானது. இதனிடையே படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரவி தேஜா, “எனக்கு தமிழ் மொழி ரொம்ப பிடிக்கும். அதில் நையாண்டி கலந்த பேச்சு இருக்கும்.. என்னுடைய சினிமா போராட்டம் இங்கே தான் 90-களின் நடுவில் ஆரம்பித்தது. படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. ஜிவி பிரகாஷ், இந்தப்படத்தின் ஆன்மா. எடிட் ரூமில் நான் இசை இல்லாமல் இந்த படத்தை பார்த்தேன். அப்போதே எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. ஆனால் ஜிவி இசையுடன் தியேட்டரில் பார்த்த போது சூப்பராக இருந்தது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் இசையைக் கேட்டு ஆண்களும் கண்ணீர் விடுகின்றனர். பேபி நக்ஷத்ரா நட்சத்திரமாக இருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பிரியா பவானி ஷங்கருடன் வேலை பார்த்தது நல்ல அனுபவம். அவர் ஒரு ஜோவியலான மனிதர். தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் ரவி எனக்குச் சிறந்த நண்பர்களாக இருந்தனர்.. கடைசியாக என்னுடைய இயக்குநர் சிவா... தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இப்படத்திற்கு வெற்றி விழா நடத்த வேண்டும் என சொல்லியிருந்தேன். ஆனால் அதே வெற்றி விழா சென்னையிலும் நடத்த வேண்டும். அதில் சிவாவை பற்றி நான் பேசுகிறேன். எல்லாரும் படத்தைக் கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று பாருங்கள். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். இந்த படத்தை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வீர்கள்” என்றார்.

இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த ‘இருமுடி’ திரைப்படம் கடந்த 21-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார், மேலும் இப்படம் தமிழில் ‘இருமுடி கட்டு’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ரவி தேஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது, நையாண்டி கலந்த தமிழ் மொழியைத் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தனது சினிமா போராட்டப் பயணம் சென்னையில் தான் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.