PulseNews
சினிமா

வயிற்றில் சிசு, ரஜினி படத்தில் செம்ம டான்ஸ்: கர்ப்பிணியாக ஜெயிலர் 2 பாடலுக்கு ஆடிய நடிகை பூர்ணா

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த பாடலுக்கு நடனமாடிய நடிகை பூர்ணா, தான் கர்ப்பிணியாக இருந்தபோது ஆடியதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், முதல் பாடலான ‘அலா போலேலோ’ வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்த உற்சாகமான பாடலில் ரஜினிகாந்த் மற்றும் நடிகையும் நடனக் கலைஞருமான பூர்ணா இடம்பெற்றுள்ளனர். இந்தப் பாடலில் ரஜினிகாந்த் நடனமாடும் காட்சிகள் இடம்பெறவில்லை என்றாலும், பூர்ணா தனது நடன அசைவுகள் மற்றும் முகபாவனைகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக, அவர் வெள்ளை நிற சேலையில் தோன்றியிருப்பதும் பாடல் தொடர்பான முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ‘அலா போலேலோ’ பாடல் மூலம் ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் பூர்ணா ரீ-என்டரி கொடுத்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் நன்கு அறிமுகமான முகமாக இருக்கும் பூர்ணா, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ‘பூர்ணா’ என்ற திரைப்பெயராலும் பிரபலமானவர். நடனம் அவரது திரைப்பயணத்தின் மற்றொரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. 2004ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண் குட்டி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் பூர்ணா தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். அதன்பின்னர் ‘கல்லூரி குமரன்’, ‘ஃப்ளாஷ்’, ‘மிலி’, ‘ஆகாஷகங்கா 2’, ‘துண்டு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘அவுனு’, ‘அவுனு 2’, ‘லட்டு பாபு’, ‘ராஜு காரி கதி’, ‘சுந்தரி’, ‘அகண்டா’ மற்றும் ‘தசரா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’, ‘வித்தகன்’, ‘கொடிவீரன்’, ‘சவரக்கத்தி’ மற்றும் ‘டெவில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதற்கு முன்பு, நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான ‘அகண்டா 2: தாண்டவம்’ திரைப்படத்தில் பூர்ணா பத்மாவதி ஐஏஎஸ் என்ற கதாபாத்திரத்தில் பூர்ணா நடித்திருந்தார். ‘ஜெயிலர் 2’ படத்தில் அவரது கேரக்டர் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, ‘அலா போலேலோ’ பாடலில் அவரது நடனத் திறமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பாடலின் மூலம் படத்தின் வெளியீட்டுக்கு முன்பே பூர்ணா இன்னும் அதிகமான ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த பாடலுக்கு நடனமாடும்போது தான் கர்ப்பமாக இருந்ததாக பூர்ணா கூறியுள்ளார். வயித்துல குழந்தையோட Dance..😮❤️Ala Bolelo pic.twitter.com/kEkaQNm4VZ — Behindwoods (@behindwoods) August 28, 2026 இது குறித்து பேசிய அவர், இந்த பாடலை 6 நாட்கள் ஷூட் செய்தோம். ஒருநாள் முடிந்தவுடன் அகண்டா 2 ஷூட்டிங் போனேன். அடுத்த நாள் தான் நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. அதன்பிறகு ஜெயிலர் பாடலுக்கு ஆடினேன். இப்படி ஆடிவிட்டு நீ கர்ப்பமாக இருப்பது சாத்தியமில்லை என்று என் அம்மா சொன்னார். மீண்டும் செக் பண்ணு என்று சொன்னவுடன், அவரது பேச்சை கேட்டு செக் செய்தேன். அப்போதும் கர்ப்பம் என்று தான் வந்தது என்று பூர்ணா தெரிவித்துள்ளார்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வயிற்றில் சிசு, ரஜினி படத்தில் செம்ம டான்ஸ்: கர்ப்பிணியாக ஜெயிலர் 2 பாடலுக்கு ஆடிய நடிகை பூர்ணா
PulseNews சுருக்கம்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘அலா போலோலே’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு, நடிகையும் நடனக் கலைஞருமான பூர்ணா நடனமாடியுள்ளார்.

இந்த உற்சாகமான பாடலில் இடம்பெற்றுள்ள பூர்ணா, தான் கர்ப்பிணியாக இருந்தபோது இந்தப் பாடலுக்கு நடனமாடியதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema