PulseNews
சினிமா

ஆக்சனுக்கு நடுவே காதல் ஈர்த்ததா? - 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' விமர்சனம்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு கருப்பு படம் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பிய சூர்யா இந்த முறை மீண்டும் குடும்பங்கள் கொண்டாடும் சென்டிமென்ட் நிறைந்த காதல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது ஆக்சன் காலம் என்பதால் பல்வேறு ஆக்சன் கதைகளுக்கு இடையே அவ்வப்போது காதல் மற்றும் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட கதைகளும் வந்து வெற்றி பெற்று வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் இணைய சூர்யாவும் அதே பாணியில் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தை கொடுத்திருக்கிறார் அது எந்த அளவு ரசிகர்களை ஈர்த்திருக்கிறது? திருமணமே பிடிக்காமல் 40 வயதை தாண்டியும் பேச்சுலராக இருக்கும் தொழிலதிபர் சூர்யாவுக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என அம்மா ராதிகா முயற்சி செய்து வருகிறார். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் சூர்யா வெளிநாட்டிற்கு சென்று வாடகை தாயின் மூலம் ஒரு குழந்தை பெற்றுக் கொண்டு இந்தியா திரும்புகிறார். அந்தக் குழந்தை நன்றாக வளரும் நேரத்தில் திடீரென ஒரு நோய் ஏற்படுகிறது. அந்த நோயை சரி செய்ய அந்த குழந்தையின் தாய் தேவைப்படுகிறார். இதற்காக வெளிநாடு செல்லும் சூர்யா வாடகை தாயான தன்னை விட 20 வயது சிறியவரான மமிதா பைஜுவை கன்வின்ஸ் செய்து இந்தியா அழைத்து வருகிறார். வந்த இடத்தில் மமிதா பைஜூ சூர்யா மேல் காதலில் விழுகிறார். அவரை எப்படியாவது திருமணம் செய்ய நினைக்கிறார். அவரது ஆசை நிறைவேறியதா, இல்லையா? திருமணமே பிடிக்காத சூர்யா திருமணத்திற்கு சம்மதித்தாரா, இல்லையா? கிட்டத்தட்ட பாலச்சந்தர், பாக்யராஜ் வகை கதை அமைப்பை கொண்ட கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் திரைப்படம் போலவே ஜனரஞ்சகமாகவும் குடும்பங்கள் கொண்டாடும் கலகலப்பான நெகிழ்ச்சியான காதல் காமெடி திரைப்படமாக இந்த திரைப்படத்தை உருவாக்கி வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் படங்கள் மூலம் இந்திய ரசிகர்களை தன் வசப்படுத்திய இயக்குநர் வெங்கி அட்லூரி இந்த படம் மூலம் மீண்டும் ஒருமுறை அதே போன்ற ஒரு வெற்றியை பெற்று ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பித்து முதல் பாதி முழுவதும் மிகவும் கலகலப்பாகவும் வேகமாகவும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி செல்லும் திரைப்படம் இரண்டாம் பாதியில் பெரியவர்களை மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் செண்டிமெண்ட் பாதைக்கு திரும்பி சற்று மெதுவாக நகர்ந்து இறுதி கட்டத்தில் மீண்டும் வேகம் எடுத்து நிறைவாக முடிந்திருக்கிறது. முதல் பாதி முழுவதும் ஜென் சி மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் திரைப்படம் இரண்டாம் பாதியில் குடும்பங்கள் மட்டும் பெரியவர்கள் ரசிக்கும்படி அமைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இருந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறது. 40 வயதுக்கு மேல் இருக்கும் ஆணுக்கும் 20 வயது குறைவான பெண்ணுக்கும் இருக்கும் காதல் கதையை உளவியல் ரீதியாகவும் அதேசமயம் கலகலப்பாக மக்கள் ரசிக்கும் படியும் குடும்பங்கள் கொண்டாடும் வகையிலும் ஒருசேர உருவாக்கி எந்த ஒரு இடத்திலும் சற்று பிசகினாலும் காண்ட்ரவர்சி நிறைந்த சீரியல் படமாக மாறும் நிலைமையில் இருக்கும் இப்படியான ஒரு கதையை கையில் எடுத்துக் கொண்டு அதை திறன் பட சமாளித்து எந்த ஒரு இடத்திலும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பான குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக இந்த திரைப்படத்தை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி. படத்தின் இரண்டாம் பாதியில் பலவிதமான வேகத்தடைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் அவை நமக்கு சற்று அயற்சியை கொடுத்தாலும் அவையெல்லாம் படத்தின் ஜனரஞ்சகமான விஷயங்களால் மறக்கடிக்க செய்து ஒரு நிறைவான குடும்ப படம் பார்த்த உணர்வை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது. படத்தின் நாயகன் சூர்யா மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபிஸர் போல் இருக்கிறார். மிகவும் விரைப்பாக இருக்கிறார். ரஃப் அண்ட் டப் ஆக இவர் இருப்பது அந்த கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்றை வைத்து இருக்கிறது. கலகலப்பான கதாபாத்திரமாக இல்லாமல் மிகவும் இறுக்கம் நிறைந்த கதாபாத்திரத்தை சிறப்பான முறையில் கையாண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. வயதுக்கேத்த கதாபாத்திரத்தை அழகாக கையாண்டிருக்கிறார். உண்மையில் படத்தின் நாயகன் என்று சொன்னால் அது மமிதா பைஜூதான். இவர் வரும் காட்சிகள் எல்லாம் அதகளம். ஒவ்வொரு முக பாவனைகளிலும் வசன உச்சரிப்புகளிலும் லைக்ஸ்களை அள்ளி கைத்தட்டல் பெறுகிறார். நடிகர் சூர்யாவுக்கே பல இடங்களில் டப் கொடுத்து நடித்திருக்கிறார். இப்படி ஒரு பப்லியான கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்றும் அளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கிறார். இந்த படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக இவரது நடிப்பு தென்பட்டிருக்கிறது. இவருக்கு விருதுகள் நிச்சயம். இவரது எனர்ஜி படம் முழுவதும் படர்ந்து நம்மை படத்துடன் ஒன்ற வைத்து இருக்கிறது. அம்மாவாக ஒரு ராதிகா வழக்கம் போல் தனக்கு என்ன வருமோ அதை சிறப்பாக செய்து ரசிக்க வைத்திருக்கிறார். எந்தெந்த இடங்களுக்கு எந்தெந்த அளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். இவரின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. மற்றொரு சித்தியாக வரும் ரவீனா டண்டன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். சூர்யாவின் மாமாவாக வரும் வைபவுடைய அண்ணன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிரிப்பு மூட்டுகிறார். மற்றபடி உடன் நடித்த நாசர் மைன் கோபி காளி வெங்கட் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர். நிமேஷ் ரவி ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக பிரம்மாண்டம் மற்றும் ரிச். பணத்தை வாரி இறைத்து செலவு செய்திருப்பதால் படம் மிக அழகாகவும் ரிச்சாகவும் தெரிகிறது. அதற்கு நிமேஷின் கேமரா நன்றாக ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசையில் பட்டாம்பூச்சி பாடல் குத்தாட்டம் போட வைத்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையில் எந்த அளவு ஈர்ப்பு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலச்சந்தர் படம் பாணியில் பாக்யராஜின் முந்தானை முடிச்சு கதை அம்சத்தில் இவை இரண்டையும் கலந்து கட்டி இந்த கால ஜென்சிக்களுக்கு ஏற்றார் போல் திரைக்கதை அமைப்பையும் உருவாக்கி அதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் குடும்பங்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு அழகான பேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் உருவாகி ரசிகர்களை நன்றாக கவர்ந்து ஈர்த்திருக்கிறது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - பிளிஸ்ஃபுல்!

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆக்சனுக்கு நடுவே காதல் ஈர்த்ததா? - 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' விமர்சனம்!
PulseNews சுருக்கம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கருப்பு' படத்தின் மூலம் வெற்றியைப் பதிவு செய்த சூர்யா, தற்போது 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தின் மூலம் குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான காதல் மற்றும் சென்டிமென்ட் நிறைந்த கதையில் நடித்துள்ளார்.

தற்போதைய தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் படங்களின் ஆதிக்கம் இருந்தாலும், அவ்வப்போது வெளியாகும் குடும்பக் கதைகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் சூர்யா களம் இறங்கியுள்ள இப்படம், ரசிகர்களை எந்த அளவுக்குக் கவர்ந்துள்ளது என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பாக உள்ளது.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema