220 கோடி செலவில் நாயாகவே மாறிய கோடீஸ்வரர்! அது எப்படி? வைரலாகும் வீடியோ...!!!
ஜப்பானைச் சேர்ந்த 26 வயது கோடீஸ்வர இளைஞர் ஒருவர், தன்னை முழுமையாக நாயாக மாற்றிக்கொள்ள ரூ.2.2 பில்லியன் செலவில் பல அறுவை சிகிச்சைகளை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. நாயைப் போல நடப்பது, பழகுவது உள்ளிட்ட செயல்களையும் அவர் செய்வதாக வைரல் பதிவுகள் கூறுகின்றன. ஆனால் இந்த தகவல்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை. ரூ.220 கோடி செலவு செய்ததாக பரவிய தகவல் வைரல் பதிவுகளின்படி, அந்த இளைஞர் தனது முகம் மற்றும் உடல் அமைப்பை மாற்றுவதற்காக மிகப்பெரிய தொகையை செலவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனிதர் ஒருவர் நாயாக மாறுவதற்காக இவ்வளவு பணத்தை செலவிட்டாரா என்ற ஆச்சரியம் இணையத்தில் ஏற்பட்டது. வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த பலரும் இதன் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினர். இதையும் படிங்க: அதிசயமா? ஆச்சர்யமா? கோயிலில் படமெடுத்து நின்ற நள்ளாத்துப் பாம்பு...! தலையில் ஒளிரும் மணியால் பரவசத்தில் பக்தர்கள்! வைரலாகும் வீடியோ ..!!! அறுவை சிகிச்சை இல்லை; பிரத்யேக உடை? ஆனால் பல செய்தி அறிக்கைகள் இந்தக் கூற்றுக்கு மாறான தகவல்களை சுட்டிக்காட்டுகின்றன. அந்த நபர் எந்தவொரு முகம் அல்லது உடல் மாற்ற அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளவில்லை என்றும், ஜப்பானிய மதிப்பில் சுமார் 20 லட்சம் யென், அதாவது இந்திய மதிப்பில் ரூ.11 முதல் 12 லட்சம் வரை செலவிட்டு மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட நாய் உடை ஒன்றை உருவாக்கி அணிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த உடை நாயின் உடற்கூறு அமைப்பை மிகவும் நெருக்கமாக பிரதிபலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் வீடியோவில் அவர் உண்மையிலேயே நாயாக மாறியிருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். இதன்படி பார்த்தால், ரூ.220 கோடி செலவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்ற தகவலுக்கு ஆதாரம் இல்லை. வைரல் தகவலின் உண்மை என்ன? தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்தக் கூற்றுக்கு தெளிவான அதிகாரப்பூர்வ ஆதாரம் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக வைரல் செய்தி கூறுவது போல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றதா அல்லது பிரத்யேக உடையை பயன்படுத்தி வீடியோ உருவாக்கப்பட்டதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை. எனவே, சமூக வலைதளப் பதிவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்தக் கூற்றை உண்மை என கருத முடியாத நிலையே தற்போது உள்ளது. इंसान से ‘Dog’ बनने के लिए ₹220 करोड़ खर्च? जापान के 26 वर्षीय करोड़पति Jaso को लेकर सोशल मीडिया पर दावा वायरल है कि उन्होंने खुद को कुत्ते जैसा दिखाने और उसी तरह जीवन जीने के लिए कथित तौर पर ₹220 करोड़ खर्च किए। 😳😳😳 pic.twitter.com/lIYJWoPQSo — दिव्या कुमारी (@divyakumaari) August 8, 2026 இதையும் படிங்க: குப்பையில் தூக்கி வீசப்பட்ட அந்த ஒரு சீட்..! 2 நாட்கள் நடந்த தீவிர தேடல்.... கடைசியில் காத்திருந்த பேரதிர்ச்சி! அமௌன்ட்டை பார்த்தா ஆடிபோயிருவீங்க...!!!

ஜப்பானைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவர், தன்னை நாயாக மாற்றிக்கொள்ள ரூ.220 கோடி செலவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், அந்த நபர் அறுவை சிகிச்சை எதையும் செய்துகொள்ளவில்லை என்றும், சுமார் ரூ.11 முதல் 12 லட்சம் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக நாய் உடையை அணிந்துள்ளதாகவும் சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களை மட்டும் வைத்து, அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டாரா அல்லது உடையை மட்டுமே பயன்படுத்தினாரா என்பதை உண்மை என உறுதிப்படுத்த முடியாது.