சினேகா செய்த ரியல் சம்பவம், அதையே என் பட ஹீரோயின் அறிமுக காட்சிக்கு வைத்தேன்: சசிகுமார் சொன்னது எந்த படம்?
தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சசிகுமார். இயல்பான நடிப்பு, கிராமத்து பின்னணியிலான கதைகள், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட படங்கள் என ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றுள்ளார். இதுவரை நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சசிகுமார் விரைவில், படம் மற்றும் வெப் தொடர்கள் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேபோல் டிவி நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். அந்த வகையில் ஜீ தமிழன் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சினேகா நடுவராக பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சசிகுமார், சொன்ன விளையாட்டாக நினைப்பீர்கள். நான் சினோவின் மிகப்பெரிய ரசிகன். நான் 3 சம்பவங்களை சொல்வேன் சொல்லி முடித்தவுடன் அது உண்மையாக இருந்தால், நீங்கள் இங்கு வந்துவிட வேண்டும் என்று ஸ்டேஜ்க்கு அழைத்துள்ளார். அதன்படி நடிகை சினேகாவுடன் தனக்கு ஏற்பட்ட மூன்று சந்திப்புகள் குறித்து சசிகுமார் மனம் திறந்து பேசியுள்ளார். சினேகா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களிலும், அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் கதைகளிலும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். சசிகுமார் மற்றும் சினேகா இருவரும் இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் குறித்த பேச்சு தற்போது கவனம் பெற்றுள்ளது. தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இவர் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகுமார், முதல் முறை சந்திப்பு நடந்தது நான் உதவி இயக்குனராக இருக்கும்போது தான். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது சந்தித்தேன். அப்போது உங்கள் பின்னாடி ஓடி வந்து நின்றேன் நீங்கள் ஒரு வெள்ளை நிற உடையில் வந்திருந்தீர்கள் என்று சொல்ல, சரி தான் என்று சினேகா ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு 2-வது முறையாக ஒரு விருது விழாவில் சந்தித்தேன். அப்போது ஒரு கால் என்னை மித்தது. நான் யார் என்று கோபமான பார்த்தேன். அப்போது நீங்கள் நின்னீர்கள். View this post on Instagram A post shared by ZEE 5 Tamil (@zee5tamil) இந்த கால் மதி வாங்கிய காட்சியை தான் வெற்றிவேல் படத்தில் சீனாக வைக்க சொன்னேன் இது உங்கள் மூலமாக வந்த இன்ஸ்பிரேஷன் தான் என்று கூறியுள்ளார். அதை கேட்ட சினேகா, அன்றைக்கு நடந்ததற்கு இன்றைக்கு சாரி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அடுத்து 3-வது சந்திப்பு ஒய்.ஜி.மகேந்திரன்ன நாடகம் ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக நாம் தான் வந்திருந்தோம் ஞாபகம் இருக்கிறதா என்று சசிகுமார் கேட்க, சினேகா ஒப்புக்கொண்டு ஸடேஜ்க்கு வந்துள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் சசிகுமார். கிராமத்து கதைகள் மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
தற்போது சசிகுமார் மீண்டும் இயக்கம் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில், ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர், நடிகை சினேகாவின் நிஜ வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை தனது படத்தின் கதாநாயகி அறிமுகக் காட்சிக்காகப் பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.