PulseNews
சினிமா

Madurai News: விமானத்தை பார்க்கும் ஆசையில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. துள்ளத்துடிக்க பலி.!

இருசக்கர வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோழர்கள்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பரளச்சி பகுதியில் வசித்து வருபவர் பாண்டித்துரை (வயது 22). அங்குள்ள திருச்சுழி, உடைய சேவைக்காரன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முனீஸ்வரன் (வயது 24). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இதையும் படிங்க: #JUSTIN: நொடியில் நடந்த கோர விபத்து.. இளம் தம்பதி, பச்சிளம் பிஞ்சு என 4 பேர் பலி.. மதுரையில் சோகம்.! மதுரையில் வேலை: கட்டிட தொழிலாளர்களான இருவரும் கடந்த சில நாட்களாகவே மதுரையில் உள்ள திருப்பாலை பகுதியில் தங்கியிருந்தபடி வேலை பார்த்து வந்துள்ளனர். பின் கோயில் திருவிழாவில் பங்கேற்க பாண்டித்துரை, முனீஸ்வரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டு இருக்கின்றனர். விபரீத பயணம்: மதுரை விமான நிலையம், சின்ன உடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, விமான நிலையத்தில் இருக்கும் விமானம் ஓடுதளத்துக்கு வருகிறதா? என எட்டிப்பார்த்தபடி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். விபத்து: அச்சமயம், திடீரென இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறியது. அப்போது, சாலைத்தடுப்பில் மோதி இருவரும் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரும் சாலையிலேயே சிறிது நேரத்தில் துடிதுடிக்க உயிரிழந்தனர். விசாரணை: இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இருவரின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையும் படிங்க: படிக்கட்டு பயணத்தால் விபரீதம்.. மாணவர்களின் பெற்றோர்களே உஷார்.. பேருந்தில் இருந்து கீழே விழுந்து சோகம்.!

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Madurai News: விமானத்தை பார்க்கும் ஆசையில் பரிதாபமாக பறிபோன உயிர்கள்.. துள்ளத்துடிக்க பலி.!
PulseNews சுருக்கம்

மதுரை அருகே விமானத்தைப் பார்ப்பதற்காகச் சென்ற இரண்டு இளைஞர்கள், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான பாண்டித்துரை மற்றும் 24 வயதான முனீஸ்வரன் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்தனர்.

கட்டிடத் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்த இவர்கள், விமானத்தைப் பார்க்கும் ஆசையில் சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்தித்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இவர்களின் உறவினர்களிடையே பெரும் துயரத்தை உருவாக்கியுள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema