"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?

Mahesh Babu Reviews Lokesh Kanagaraj Action DC Movie : பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த சமீபத்திய பிரம்மாண்ட ஆக்ஷன் எண்டர்டெய்னர் 'DC' பாக்ஸ் ஆபிஸில் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் 10 நாட்களில் உலகளவில் ரூ.84 கோடிக்கு மேல் கிராஸ் வசூலுடன் சாதனை படைத்துள்ளது. தற்போது ரூ.100 கோடி வசூலை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. சமீபத்தில், இந்த படத்தை டோலிவுட் டாப் ஸ்டார்ஸ் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் பாராட்டினர்.

'DC அற்புதமான படம்'

DC மிகவும் புதுமையான, அற்புதமான படம் என்று பாராட்டினார் மகேஷ் பாபு. இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘DC படம் மிகவும் நன்றாக உள்ளது. ஒவ்வொரு அம்சமும் பிடித்தது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பதிவு செய்தார். இந்த பதிவை DC இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மீண்டும் பகிர்ந்து மகேஷ் பாபுவுக்கு நன்றி தெரிவித்தார்.

'உங்கள் பதிவு உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நீங்கள் DC-யைப் பார்த்து, அதை பாராட்டியது மிகவும் சிறப்பாக உணரப்படுகிறது. உங்கள் அன்புக்கும், கருத்துகளுக்கும் நன்றி.' என்று பதிலளித்தார்.

Thank you so much, sir, for watching #DC and embracing the film with so much love. ❤️ It means a lot to the entire team. As a filmmaker, your words and appreciation make this even more special for us. 🙏♥️ https://t.co/LkZeAb7fo4
— Arun Matheswaran (@ArunMatheswaran) August 17, 2026

'புரிந்தால் அதுவே ஒரு கவிதை'

DC படத்தை பார்த்தேன்... அது ஒரு தமிழ் கிளாசிக் என்று அல்லு அர்ஜுன் விமர்சனம் செய்தார். 'DC படத்தை ஒவ்வொரு சினிமா ரசிகரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். புரிந்தவர்களுக்கு அது ஒரு கவிதை போல. படக்குழுவுக்கு வாழ்த்துகள். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் மிகச் சிறப்பாக எடுத்துள்ளார். அனிருத் உண்மையிலேயே மாஸ்டர் பூஸ்டர். லோகேஷ் தனது பாத்திரத்தில் முழுமையாக ஒன்றியுள்ளார்’ என்று பாராட்டினார்.

Watched #DC ! It’s a Tamil classic. Every film lover must watch it. It’s poetry for those who get it.

Congratulations to the entire #DC team. Highest respect to Director @ArunMatheswaran garu. @anirudhofficial absolute master booster! Technically brilliant.
All the artists are...
— Allu Arjun (@alluarjun) August 17, 2026

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்த 'DC' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 7-ம் தேதி வெளியான இப்படம், 10 நாட்களில் உலக அளவில் 84 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தற்போது இப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நோக்கி முன்னேறி வருகிறது.
இந்த ஆக்ஷன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, டோலிவுட் நட்சத்திரங்களான மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் படத்தைப் பாராட்டி தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.