PulseNews
சினிமா

'துணை முதலமைச்சர் அண்ணன்'... அமைச்சர் ஆனந்த் கொடுத்த ரியாக்சன்

தமிழக முதல்வர் விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பு இருந்தே அவருடன் பயணித்து வரும் அமைச்சர் ஆனந்த், திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது, அங்கு துணை முதல்வர் என்று தொண்டர்கள் கோஷம் எழுப்ப, அதை சிரித்த முகத்துடன் கண்டித்துள்ளார். தமிழகத்தில் கந்த 1967-ம் ஆண்டு முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், தி.மு.க. மற்றும் அ.தி.முக. என இரு திராவிட கட்சிகள் தான் ஆட்சியில் அமர்ந்திருந்தது. இந்த 49 ஆண்டு கால வரலாற்றை உடைக்கும் வகையில், கடந்த 2026 சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் கூட்டணி இல்லாமல், 35 சதவீத வாக்குகள் பெற்று 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க தனி பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. அதே சமயம் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் இல்லாததால், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் விஜய் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் இந்த அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனிடையே கடந்த 2024-ம் ஆண்டு விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்துள்ளார். அவர், கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே அவருடன் பயணித்து வருபவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரியை சேர்ந்த இவர், புஸ்ஸி என்ற தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 2016-ல் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த அவர், தமிழகத்தில் விஜயுடன் பயணித்து வந்தார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய போது கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட அவர், தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். கடந்த தி.மு.க. ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமியின் அ.தி.மு.க. ஆட்சியில் ஒ.பன்னீர்செல்வம், கருணாநிதி ஆட்சியின்போது மு.க.ஸ்டாலின் ஆகியோர் துணை முதல்வர் பதவியில் இருந்துள்ளனர். இந்த பதவி கட்டாயம் இல்லை என்பதால், மற்ற முதல்வர்கள் இதில் கவனம் செலுத்தாத நிலையில், தற்போது முதல்வர் விஜயும் இது குறித்து எந்த முடிவும் எடுத்ததாக தெரியவில்லை. துணை முதலமைச்சர் என அழைத்த தொண்டர்கள் ஜாலியாக அதட்டிய அமைச்சர் ஆனந்த் #MinisterAnand #Trichy #TVK #News18TamilNadu pic.twitter.com/flfDeOILac — News18 Tamil Nadu (@News18TamilNadu) August 22, 2026 இதனிடையே திருச்சியில் ஒரு நிகழச்சிக்காக சென்றிருந்த புஸ்ஸி ஆனந்த்க்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கோஷம் எழுப்பிய துணை முதல்வர் என்று சொல்ல, அதை சிரித்த முகத்துடன் கண்டித்துள்ளார், நிரந்தர பொதுச்செயலாளர், என்று சொல்லும்போது சிரித்த அவர், துணை முதல்வர் என்று சொன்னவுடன், ஏய் என்பது போல் கண்டித்த நிகழ்வு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
'துணை முதலமைச்சர் அண்ணன்'... அமைச்சர் ஆனந்த் கொடுத்த ரியாக்சன்
PulseNews சுருக்கம்

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்திடம், தொண்டர்கள் அவரை துணை முதல்வர் என்று முழக்கமிட்டு வரவேற்றனர். இதனைப் புன்னகையுடனும் அதே சமயம் கண்டிப்புடனும் அமைச்சர் மறுத்துள்ளார்.

தமிழகத்தில் 1967 முதல் 2021 வரை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே ஆட்சியில் இருந்து வந்தன. இந்த நீண்ட கால அரசியல் வரலாற்றை மாற்றும் வகையில், 2026 சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்ட சூழல் குறித்து அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#cinema